ADVERTISEMENT

காப்புக் காட்டுக்குள் கேட்பாரற்றுக் கிடந்த நாட்டுத் துப்பாக்கிகள்!

11:55 PM Feb 15, 2021 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை காவல் நிலைய எஸ்.ஐ. ரகுநாதன் மற்றம் காவலர்கள் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது குந்துக்கோட்டை காப்புக்காட்டில் முட்புதரில் ஒரு நாட்டுத்துப்பாக்கி கேட்பாரற்றுக் கிடந்தது. அதை மீட்டு, காவல்நிலையத்திற்குக் கொண்டு சென்றனர்.

அதேபோல், அஞ்செட்டி சிறப்புக் காவல் ஆய்வாளர் வீரகுமார் தலைமையில் காவலர்கள் ரோந்து சென்றபோது, நாட்றம்பாளையம் சாலை கேரட்டி காப்புக் காட்டில் உள்ள ஒரு புதரில் கேட்பாரற்றுக் கிடந்த ஒரு நாட்டுத்துப்பாக்கியைக் கைப்பற்றினர்.

கைப்பற்றப்பட்ட இரு துப்பாக்கிகளையும் வீசிச் சென்ற மர்ம நபர்கள் யார் என்பது குறித்து உள்ளூர் கிராம மக்களிடம் விசாரணை நடந்து வருகின்றது. தடை செய்யப்பட்ட காப்புக்காட்டுக்குள் விலங்குகளை வேட்டையாட வந்த கும்பல், காவல்துறையினர் வருவதைக் கண்டு நாட்டுத் துப்பாக்கிகளைப் போட்டுவிட்டுச் சென்றார்களா அல்லது தேர்தல் நேரத்தில் உரிமம் இல்லாத துப்பாக்கி வைத்திருந்தால் சிக்கிக் கொள்வோம் என்ற அச்சத்தால் புதருக்குள் போட்டுச் சென்றனரா என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT