Suspect in the incident ; A tragic decision by mother and daughter

வாகன விபத்தில் உயிரிழந்த மகனின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகத்தாயும் மகளும் கடிதம் எழுதி வைத்துவிட்டுத்தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கிருஷ்ணகிரியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment

கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை பகுதியை ஒட்டியுள்ள உங்கட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கிரி (29). இவர்கடந்த ஆகஸ்ட் மாதம் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோதுவாகன விபத்தில் சிக்கியுள்ளார். தொடர்ந்து கோமா நிலைக்குச் சென்ற இளைஞர், கடந்த செப்டம்பர் மாதம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ஏற்கனவே இளைஞர் கிரிக்கும் மற்றொரு தரப்பிற்கும் இடையே தகராறு இருந்ததால் அவருடைய இந்த இறப்பில் சந்தேகம் இருப்பதாக கிரியின் தாய் காமாட்சி காவல்துறையில் புகார் அளித்திருந்தார். ஆனால் இந்தப் புகாரின் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கருதிய காமாட்சி மன வருத்தத்தில் இருந்தார் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் தாய் காமாட்சி,12 ஆம் வகுப்பு பயின்று வரும் தன்னுடைய மகள் காவியாவுடன் தூக்கிட்டுத்தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர்கள் எழுதி வைத்துள்ள கடிதத்தில், தன்னுடைய அண்ணன் வாங்கிக் கொடுத்த தங்கச் சங்கிலியோடு தன்னைப் புதைத்து விடுமாறு உருக்கமாகத்தெரிவித்துள்ளார். இந்தத்தற்கொலை சம்பவத்தால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் மற்றும் காமாட்சியின் உறவினர்கள் இரவில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த எஸ்.பி சரோஜ் குமார் தாகூர் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.

Advertisment