ADVERTISEMENT

மாலையில் டிஸ்சார்ஜ் ஆகிறார் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்

01:16 PM Dec 01, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழக வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன். வழக்கமான பரிசோதனைக்காக புதன்கிழமை மாலை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றார்.

இதுகுறித்து நாம் விசாரித்தபோது, கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரனின் குடும்ப மருத்துவர் செங்குட்டுவன். அவரிடம் வழக்கமான பரிசோதனைக்காக அப்பாயின்மெண்ட் கேட்டிருந்தார். அவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வெளிநாடு சென்றிருந்ததால் சந்திக்க முடியவில்லை. வெளிநாட்டிலிருந்து திரும்பிய மருத்துவர் செங்குட்டுவன், அமைச்சருக்கு தகவல் கொடுத்திருக்கிறார்.

இதையடுத்து வழக்கமான பரிசோதனைக்காக அமைச்சர் மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார். தற்போது நலமாக இருக்கிறார் என்றும் இன்று (வியாழன்) மாலை டிஸ்சார்ஜ் ஆகிறார் என்றும் அமைச்சரின் நெருக்கமானவர்கள் தெரிவிக்கின்றனர்.

திடீரென அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டு, அதனைத் தொடர்ந்து நடந்த சிகிச்சை விவரங்கள், மருத்துவ விவரங்கள் ரகசியமாகவே வைக்கப்பட்டன. அவர் மறைந்த தேதி, நேரம் குறித்தும், மருத்துவமனை நடவடிக்கைகள் குறித்தும் இன்னும் விவாதம் நடந்து வருகிறது. இந்தநிலையில், அந்த மருத்துவமனைக்கு முக்கிய விஐபிக்கள் யாராவது சென்றாலும், அங்கு என்ன நடக்கிறது என்று விசாரிக்காமலேயே செய்திகள் வெளியாகிறது. இதற்காகவே சிலரை நியமித்துள்ளதாகவும் சொல்கின்றனர்.


கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மருத்துவமனைக்கு சென்ற விஷயத்தையும் விசாரிக்காமல், சிலர் தீவிர சிகிச்சையில் உள்ளார் எனச் செய்திகள் வெளியிடுகின்றனர். ஆனால், அவர் நலமுடன் உள்ளார். மாலையில் டிஸ்சார்ஜ் ஆகி வழக்கமான பணிகளை தொடர்வார் என அமைச்சரின் நெருக்கமானவர்கள் தெரிவிக்கின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT