ADVERTISEMENT

அமைச்சரின் பினாமி வீட்டில் 75 லட்சம் சிக்கியது? தொடரும் ஐடி ரெய்டு

09:47 PM Feb 21, 2019 | raja@nakkheeran.in

ADVERTISEMENT

வேலூர் மாவட்ட அதிமுக மேற்கு மா.செவும், தமிழக வணிகவரித்துறை அமைச்சருமான கே.சி.வீரமணி வீடு, அவரது அலுவலகம், ஹோட்டல், அவரது அரசியல் உதவியாளரும், ஜோலார்பேட்டை ந.செவுமான சீனுவாசன் வீடு, நித்தியானந்தம் என்பவரின் வீடு, கே.வி.குப்பத்தில் உள்ள வீரமணியின் பினாமி சிவக்குமார் என்வரின் வீடு, வீரமணி மீது சொத்து குவிப்பு புகார் கூறியுள்ள ரியல் எஸ்டேட் புள்ளிகள் ஜெயப்பிரகாஷ், ராமமூர்த்தி போன்றவர்களின் வீடுகளில் ரெய்டு நடந்து வருகிறது.

ADVERTISEMENT


அமைச்சர் வீரமணி, கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு இருக்கும் நிலையில் வருமான வரித்துறையினர் 25க்கும் மேற்பட்ட கார்களில் வந்து மேற்கண்ட இடங்களில் ரெய்டு நடத்திவருகின்றனர். இதில் சீனுவாசன் வீட்டில் இருந்து 75 லட்ச ரூபாய் ரொக்கமும், வீரமணியின் வீட்டில் இருந்து சில ஆவணங்கள் மற்றும் சத்தியமூர்த்தி என்பவரின் ஓட்டு வீட்டில் இருந்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை வருமான வரித்துறை அதிகாரிகள் இதுவரை உறுதி செய்யவில்லை.


காலை 7 மணிக்கு தொடங்கிய ரெய்டு சுமார் 12 மணி நேரம் கடந்தும் நடந்துகொண்டு இருக்கிறது. இந்த ரெய்டு அமைச்சர் வீரமணியை கடும் கோபத்துக்கு ஆளாக்கியுள்ளது என்கிறார்கள் அவருடன் இருப்பவர்கள்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT