மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்றுமாலை 6 மணியிடன் ஓய்ந்தது. இந்நிலையில் தூத்துக்குடி தொகுதின் திமுக வேட்பாளர் கனிமொழி தங்கியிருக்கும் வீட்டில் திடீரென வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி

Advertisment

இந்த வருமானவரித்துறை சோதனை மூலம் எனது வெற்றியை தடுக்க முடியாது. சோதனையானது ஜனநாயகத்திற்கு விரோதமானது. வேண்டுமென்றே திட்டமிட்டு இந்த சோதனை நடத்தப்பட்டது. எந்த ஆவணங்களும் கைப்பற்றப்படவில்லை இதன் மூலம் எங்களை பயமுறுத்த முடியும் என்று வேண்டுமெனறேசெய்கிறார்கள். தூத்துக்குடியில் தேர்தலை நிறுத்த வேண்டும் என்பது என்ற நோக்கத்தோடு வந்திருக்கிறார்கள். நிச்சயமாக தோல்வி பயத்தால் இதைச் செய்திருக்கிறார்கள். இன்னும் உத்வேகத்தோடு திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் பணியாற்றுவார்கள் என்றார்.

Advertisment

KANIMOZHI

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

இதையெல்லாம் தாண்டி தான் திராவிட முன்னேற்றக் கழகம் வந்துள்ளது. இதன்மூலம் தி.மு.க.வை அசைத்துக் கூடப் பார்க்க முடியாது. இன்னும் சிறப்பாக தொண்டர்கள் செயல்படுவார்கள் என்று நம்பிக்கை உள்ளது. புகாரின் அடிப்படையில் சோதனை நடைபெற்றதாக வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர் என்றார்.

Advertisment

இதுபோன்ற சோதனைகளுக்கெல்லாம் அஞ்சுகிற கட்சி திமுக இல்லை. தேர்தலை ரத்து செய்யும் நோக்கிலேயே இங்கு சோதனை நடத்தியிருக்கிறார்கள்.தமிழிசை வீட்டில் கோடிகோடியாக பணம் இருக்கிறது. அங்கு ரெய்டு நடத்த முடியுமா. கனிமொழி, தூத்துக்குடி திமுக வேட்பாளர்.எதிர்க்கட்சி வேட்பாளராக இருப்பதாலேயே என் வீட்டில் சோதனை செய்ய வந்திருக்கிறார்கள். சோதனைக்கு பிறகு நேரில் ஆஜராகுமாறு எனக்கு சம்மன் அனுப்பப்பட்டது என்றார் கனிமொழி.