ADVERTISEMENT

டைலர் மர்ம மரணம்; சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்கள்

03:59 PM Oct 19, 2022 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் போத்துராவுத்தன்பட்டி பஞ்சாயத்து, கல்லுப்பட்டியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி மகன் குமார்(28). இவர் ஈரோட்டில் டைலராக உள்ளார். இவருக்கு சத்யா என்ற மனைவியும், தனுஸ்ரீ என்ற 8 வயது மகளும் உள்ளனர். குமார் கடந்த 10 ஆண்டுகளாக ஈரோட்டில் டைலராக வேலை பார்த்து வருகிறார். தனது சொந்த ஊரான கல்லுப்பட்டியில் உறவினர் இறந்த துக்க காரியத்திற்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை வந்துள்ளார். அன்று இரவு 9 மணி அளவில் அதே ஊரைச் சேர்ந்த லாரி டிரைவர் சிவா என்பவரை அழைத்து வருவதற்காக அதே ஊரைச் சேர்ந்த மணிகண்டன் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் மனவாசி டோல் பிளாசா சென்றதாக கூறப்படுகிறது.

பின்னர் அவர் கரையான்பட்டியில் உள்ள மாமனார் வீட்டில் உடலில் காயங்களுடன் சடலமாக கிடந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் தோகைமலை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி குளித்தலை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக நேற்று அனுப்பி வைத்தனர். ஆனால் தற்போது வரை குற்றவாளிகளையும் கண்டுபிடிக்கவில்லை என்று கூறி இறந்த கருப்பையா (எ) குமாரின் சடலத்தை வாங்காமல் உறவினர்கள் நேற்று குளித்தலை அரசு மருத்துவமனை எதிரே உள்ள நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு குளித்தலை டிஎஸ்பி ஸ்ரீதர் தலைமையில் போலீசார் வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து அவர்கள் அங்கிருந்து வெளியேறி அரசு மருத்துவமனை வளாகத்தில் போலீசாருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT