/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/kulithalai-ps-art.jpg)
கரூர் மாவட்டம், குளித்தலையில் இருந்து மணப்பாறை செல்லும் சாலையில் உள்ள ரயில்வே கேட் அருகே நேற்று மாலை இருசக்கர வாகனம் ஒன்று நின்று கொண்டிருந்தது. அதன் அருகில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க வேட்டி சட்டை அணிந்த நபர் ஒருவர் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். இந்த சம்பவம் குறித்துதகவல் அறிந்து அங்கு வந்த குளித்தலை போலீசார் இறந்து கிடந்தவரின் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் வந்த இருசக்கர வாகனத்தைக் கைப்பற்றிய போலீசார் அதனை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில், அவர் பாக்கெட்டில் சென்னை டேங்கர் லாரி ஓட்டுநர் ஐடி கார்டு ஒன்று இருந்துள்ளது. அதில் உள்ள கைப்பேசி எண்ணை வைத்து குளித்தலை போலீசார் விசாரணை செய்ததில், இறந்து போனவர் மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டம், சொக்கனூரைச் சேர்ந்தகன்னி ராஜ் (வயது 45) இவருக்குத்திருமணம் ஆகி இரண்டு மகன்கள் உள்ளதாகவும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மேலும் இவர் சென்னையில் ஒரு தனியார் ஆயில் கம்பெனியில் டேங்கர் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்ததாகவும் கூறப்படுகிறது. அவர் ஏன் இரு சக்கர வாகனத்தில் கரூருக்கு வந்தார். எப்படி மர்மமான முறையில் உயிரிழந்தார் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)