ADVERTISEMENT

மண்சட்டியில் திருமண விருந்து சாப்பிட்ட மணமக்கள்!

03:00 AM Sep 20, 2019 | santhoshb@nakk…

சமீப காலமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் இளைஞர்கள் பழமையையும், பாரம்பரியத்தையும் நினைவு கூர்ந்து அதன் அடிப்படையில் தங்கள் திருமணத்தை நடத்தி வருகின்றனர். கடந்த வாரம் ஒரு தம்பதியினர் மாட்டு வண்டியில் சென்று திருமணம் செய்தனர். அதேபோல் தற்போது புலிப்பனத்தில் நடந்த ஒரு திருமணத்தில் மணமக்கள் மண்சட்டியில் விருந்து சாப்பிட்டு, அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தனர்.

திருவட்டார் கல்லாம்பொற்றையை சேர்ந்த சுஜினுக்கும் புலிப்பனத்தை சேர்ந்த அனுஷாவுக்கும் நேற்று அங்குள்ள திருமண மண்டபத்தில் திருமணம் நடந்தது. அதை தொடர்ந்து நடந்த மதிய விருந்தில் கலந்து கொண்ட உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு வாழை இலையில் உணவு பரிமாறப்பட்டது. பொதுவாக திருமண வீட்டில் மணமக்கள் கடைசியில் தான் விருந்து சாப்பிடுவார்கள்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஆனால் இந்த மணமக்கள் தாங்கள் விருந்து சாப்பிடும் பாரம்பரிய முறையை திருமணத்தில் கலந்து கொண்ட அனைவரும் அறிந்து கொள்வதற்காக முதலில் சாப்பிட்டார்கள். பொதுவாக திருமண விருந்தில் மணமகளும் மணமகனும் மாறி மாறி உணவு ஊட்டுவதும், ஒரே இலையில் சாப்பிடுவதும் போன்றவற்றை சுற்றி நிற்கும் நண்பர்கள் செய்வார்கள்.


இதற்கு மாற்றாக மணமக்கள் ஆசைப்பட்டது போல் இருவருக்கும் மண்சட்டியில் உணவு பாரிமாறி அதை மணமக்கள் சாப்பிட்டனர். இதை பார்த்த அனைவரும் ஆச்சரியப்பட்டனர். இதுபற்றி மணமக்கள் கூறும் போது, மனிதன் இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதன் அடையாளமாக தான் இதை உதாரணப்படுத்தியுள்ளோம். இயற்கை முறைப்படி வாழ்க்கையை அமைத்து கொள்ள வேண்டும். மண்பாண்டங்கள் நமது பாராம்பரியத்தின் அடையாளமாக இருந்தது. பிளாஸ்டிக் உலோகம் போன்ற பாத்திரங்கள் வருகையால் அது இன்றைக்கு அழிவு பாதையை நோக்கி சென்றுள்ளது. அதை நினைவுப்படுத்த தான் மண் சட்டியில் சாப்பிடுகிறோம் என்றனர்.


Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT