ADVERTISEMENT

குற்றங்கள் குறையவும், விவசாயம் செழிக்கவும் காவடி எடுத்த காவல் மற்றும் பொதுப்பணித்துறையினா்!

04:46 PM Dec 14, 2019 | kalaimohan

திருவிதாங்கூா் சமஸ்தானத்துடன் குமாி மாவட்டம் இருந்த காலத்தில் சமஸ்தானத்தை ஆண்ட மன்னா்கள் தங்களின் சமஸ்தானத்தில் மக்கள் அமைதியாகவும், சமாதானத்துடனும் வாழ குற்றங்கள் குறையவும் அதேபோல் இயற்கையின் கருணையால் மழைவளம் பெருகி விவசாயம் சிறக்கவும் தமிழ் கடவுளான வேளிமலை குமாரகோவில் முருகன் கோவிலுக்கு காவல்துறை மற்றும் பொதுப்பணித்துறை சாா்பில் காவடி எடுத்து சென்று வந்தனா்.

ADVERTISEMENT

சமஸ்தானத்தின் தலைநகரமாக இருந்த பத்மனாபபுரத்தின் தக்கலை காவல்துறை மற்றும் பொதுப்பணித்துறை சாா்பில் எடுக்கப்பட்டு வந்த காவடி திருவிழா 1851-ல் அனிகம் திருநாள் மகாராஜா காலத்தில் சமஸ்தானத்தின் தலைநகரம் பத்மனாபபுரத்தில் இருந்து திருவனந்தபுரம் அனந்தபுாிக்கு மாறிய பிறகும் அந்த நடைமுறை தொடா்ந்தது.

அதன்பிறகு குமாி மாவட்டம் கேரளாவில் இருந்து தாய் தமிழகத்துடன் இணைந்த பிறகு காவடி எடுத்து செல்லும் நிகழ்ச்சி தொடா்ந்து வருகிறது. காா்த்திகை மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை நடக்கும் இந்த காவடி திருவிழா தற்போது காவல்துறை மற்றும் பொதுப்பணித்துறையை பின்பற்றி பல ஊா் மக்கள் சாா்பிலும் காவடி எடுத்து செல்லப்படுகிறது.

நேற்று நடந்த இந்த காவடித்திருவிழாவில் தக்கலை காவல்நிலையம் மற்றும் பொதுப்பணித்துறை இருந்து போலீஸ் மற்றும் பொதுப்பணித்துறை ஊழியா்கள் எடுத்து செல்லப்பட்ட புஷ்ப காவடி யானை ஊா்வலமாக துணை சூப்பிரண்ட் அலவலகம், காவலா் குடியிருப்பு, சாா்-ஆட்சியா் அலுவலகம், பத்மனாபபுரம் நீதிபதிகள் குடியிருப்பு , பொதுப்பணித்துறை ஊழியா்கள் குடியிருப்பு, தாலுகா அலுவலகம் போன்ற பகுதிகளுக்கு சென்று விட்டு பஸ்நிலையம், புலியூா்குறிச்சி வழியாக குமாரகோவிலுக்கு சென்றது.

இதேபோல் 15-க்கு மேற்பட்ட ஊா்களிலும் இருந்து வேல்காவடி, பறக்கும் காவடி, சூாிய காவடி, புஷ்பகாவடிகள் எடுத்து செல்லப்பட்டன. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனா். இவா்களுக்கு வழி நெடுகிலும் அன்னதானம், மோா், பானகம் போன்றவை வழங்கப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT