ADVERTISEMENT

கமல்ஹாசன் உருவபொம்மை எரிப்பில் கலந்துக்கொண்ட 4 பேர்... சிரிப்பை வரவைத்த இந்து மக்கள் கட்சி!

06:14 PM May 15, 2019 | kalaimohan

தமிழகத்தில் அரவாங்குறிச்சி, திருப்பரங்குன்றம், சூலூர் உட்பட 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் மே 19 ந்தேதி நடைபெறவுள்ளது. இந்த இடைத்தேர்தலை முன்னிட்டு ஒவ்வொரு கட்சி தலைவரும் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

அதன்படி மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல் அவரக்குறிச்சியில் பிரச்சாரத்தில் பேசும்போது, இந்தியாவின் முதல் இந்து தீவிரவாதி கோட்சே தான் என்றார். இது இந்துத்துவா சக்திகளிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பாஜக தலைவர்கள் கமல்ஹாசனை கடுமையாக சாடிவருகின்றனர். பாஜகவுடன் கூட்டணியில் உள்ள அதிமுகவை சேர்ந்த அமைச்சர்களும் கமல் கருத்துக்கு கடுமையான வார்த்தைகளில் விமர்சனம் செய்துள்ளனர்.

இந்நிலையில் வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த பொன்னேரியில் இந்து மக்கள் கட்சியின் மாநில அமைப்பாளர் செல்வம் தலைமையில், கமல்ஹாசன் பேச்சை கண்டித்தும், கோட்சேவை எப்படி தீவிரவாதி எனச்சொல்லலாம் என கோஷமிட்டு கமல்ஹாசன் உருவபொம்மையை எரித்தனர். இந்த உருவபொம்மை எரிப்பில் 4 பேர் கலந்துக்கொண்டனர் என்பது முக்கியத்துவமானதாக உள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT