kamalhasan

சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசுகையில்,

Advertisment

மழை காரணமாக இடைத்தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது தொடர்பான கேள்விக்கு,

அடாது மழை பெய்தாலும் விடாது நாடகம் நடக்கும் என அறிவிக்கும் தைரியம் நாடகம்நடத்துபவர்களுக்கு கூட இருக்கிறது. ஆனால்மழை காரணமாக தேர்தலை தள்ளி போடவேண்டுமா என்பதுதான் இங்கே பெரிய கேள்வி.

Advertisment

அதிக பொய் வாக்குறுதிகளை கொடுத்து வெற்றிபெற்றோம் ஆனால் ஆட்சிக்கு வருவோம் என்று நினைக்கவில்லை அதனால் மக்கள் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியமால் இருக்கிறோம் என்று பாஜக மந்திரிநிதின் கட்கரி கூறியது பற்றிய கேள்விக்கு,

இப்படி பேசிக்கொண்டிருக்கும் அரசியல்வாதிகளும் இருக்கிறார்கள் என்பதற்கு சான்று என்றார்.

Advertisment

கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி எழுப்பியுள்ள குற்றச்சாட்டிற்கு,

இதுபற்றி குற்றம் சாட்டப்பட்டவர்கள்தான் கருத்து சொல்லவேண்டும்விளக்கமளிக்க வேண்டும். மீ டு குற்றச்சாட்டுகள் நியமாக இருக்க வேண்டும் என்றார்.