ADVERTISEMENT

ஐந்து பெண்களை ஏமாற்றி மோசடி செய்த கல்யாணராமன் -நான்காவது மனைவி புகார்!

05:55 PM Aug 01, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

கடலூர் மாவட்டம் மேலகுப்பம் பிள்ளையார் கோவில் பகுதியைச் சேர்ந்த காயத்ரி என்பவர் புதுச்சேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். அதில் 'புதுச்சேரி, அரியாங்குப்பத்தைச் சேர்ந்த சீனு என்கிற தெய்வநாயகம் (42), அவருடைய தாயார் வசந்தா ஆகிய இருவரும் காயத்ரி வீட்டிற்கு பெண் கேட்டுவந்தனர். அப்பொழுது உறவினர்கள் மற்றும் ஊர் பெரியவர்கள் பெண் கொடுக்க சம்மதித்தனர். அதனைத் தொடர்ந்து கடந்த 27.07.2020 அன்று நிச்சயதார்த்தம் நடைபெற்றது 21.08.2020 அன்று புதுச்சேரி பிருந்தாவனத்தில் உள்ள பிள்ளையார் கோவிலில் இரு வீட்டார் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. அப்பொழுது கரோனா ஊரடங்கு என்பதால் மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சி வைக்க முடியவில்லை.

அவரை திருமணம் செய்து கொள்வதற்காக வரதட்சணையாக 6 பவுன் தங்க நகை, இரு சக்கர வாகனம் மற்றும் பீரோ கட்டில் வழங்கப்பட்டது. மூன்று மாதங்கள் இருவரும் ஒன்றாக வாழ்ந்த நிலையில் காயத்ரியிடம் அதிகப் பணம், அதிக நகை கேட்டு தினந்தோறும் தகராறு செய்து அடித்துத் துன்புறுத்தி வந்தார். இதுகுறித்து காயத்ரி தன் தாயிடம் தகவல் தெரிவித்தார். உடனடியாக தாய் காயத்ரியின் மாமியார் வீட்டிற்கு வந்து அவர்களிடம் பேசி காயத்ரியை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அப்பொழுது காயத்ரி மூன்று மாதம் கர்ப்பிணியாக இருந்தார். தாய் வீட்டிற்கு வந்த பிறகு கணவர் என்னை வீட்டிற்கு வந்து பார்க்கவுமில்லை, பேசவும் இல்லை. ஆதலால் காயத்ரி ஏன் இவ்வாறு செய்கிறாய் என்று கேட்டதற்கு, ' நீ எனக்கு மனைவியே இல்லை' என்று உதாசீனப்படுத்தினார்.


கணவர் பேசாமல் இருப்பதற்கு என்ன காரணம் என்று கண்டுபிடிக்க அவரை பற்றி விசாரித்தபோது அவருக்கு ஏற்கனவே 3 மனைவிகள் உள்ள அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. அதில் முதல் மனைவி அனிதா என்கிற இந்திரகுமாரி, இரண்டாவது மனைவி தேவி, மூன்றாவது மனைவி கனகவல்லி ஆகியோரை திருமணம் செய்ததும், தன்னை நான்காவதாக திருமணம் செய்துள்ளதும் தெரியவந்தது. தொடர்ந்து காயத்ரி பிரசவத்திற்காக புதுச்சேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பொழுது புதுச்சேரி வம்பாகீரபாளையத்தை சேர்ந்த பிரேமா என்கிற பிரபாவதியை ஐந்தாவதாக திருமணம் செய்துள்ளதும் தெரியவந்தது.


காயத்ரியை திருமணம் செய்யும் போது முதல் மனைவி அனிதாவுக்கும் தனக்கும் விவாகரத்து ஆகிவிட்டது என்று கூறி திருமணம் செய்துள்ளார். ஆனால் இருவருக்கும் விவாகரத்து ஆகவில்லை. இப்படித் தொடர்ந்து ஐந்து பெண்களை ஏமாற்றி திருமணம் செய்தது குறித்து காயத்ரி கேட்டபோது அடியாட்களை வைத்து அடிக்கவும், கொலை செய்யவும் திட்டம் போட்டு உள்ளார் எனத் தெரியவந்தது. தொடர்ந்து பல பெண்களை இவ்வாறு மோசடி செய்து திருமணம் செய்து வருகிறார். மேலும் இவர் மீது மூன்று சீட்டு லாட்டரி விற்பனை சம்பந்தமாக வழக்குகளும் நிலுவையில் உள்ளது. இந்த புகார் குறித்து மகளிர் காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT