ADVERTISEMENT

கலைஞர் தொடங்கி வைத்த துறை என்பதால் மூடுவிழா எடுக்கும் அரசு ! 

08:37 PM Aug 14, 2019 | Anonymous (not verified)

ADVERTISEMENT

தமிழக வரவு செலவு கணக்குகளை ஏடுகளில் வைத்து பராமரித்து வந்த நிலையில், அதை பாதுகாக்க நிதித்துறையின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் 1972 ஆம் ஆண்டு தமிழகத்தில் முதல் முதலாக கணிணிமயமாகப்பட்ட துறையாக அரசு தகவல் தொகுப்பு விவர மையம் உயர்ந்திருந்தது. தற்போது இத்துறையை மூடும் விழா எடுக்க அரசே வழிவகை செய்கிறது.

ADVERTISEMENT

நிதி துறையின் கட்டுப்பாட்டின் கீழ், அரசு தகவல் தொகுப்பு விவர மையம் சிறு சேமிப்புத்துறை, கரூவூலக்கணக்குத்துறை, உள்ளாட்சி நிதி தணிக்கைத்துறை, கூட்டுறவு தணிக்கைத்துறை, தலைமை அரசுத்துறை நிறுவனத் தணிக்கைத்துறை, ஓய்வூதிய இயக்கம் என செயல்பட்டு வருகிறது.

அரசு தகவல் தொகுப்பு விவர மையம் 24 மணி நேரமும் உழைத்து இலவசமாக குறித்த காலத்தில் தேர்வு முடிவுகளை அரசுக்கு தந்துவந்தனர். ஆனால் அதை 2017 ஆம் ஆண்டில் இருந்து பள்ளி கல்வித்துறை கட்டுப்பாட்டில் இயங்கிவரும் அரசு தேர்வு துறை இயக்குநரகம் தன் வசம் எடுத்துகொண்டு அதை தற்போது தனியாருக்கு தாரை வார்த்து 250 கோடி நிதியை ஒதிக்கியுள்ளது. இலவசமாக செய்தவர்களிடம் பிடிங்கி தனியாருக்கு கொடுப்பதின் மூலமாக அரசுக்கு நிதி செலவாகிறது. அதே போல மதிப்பெண் சான்றிதழ்களில் குளறுபடி செய்யும் அபாயமும் உள்ளது.

இதன் முழுமையான நோக்கம் தமிழக அரசு எந்தெந்த துறைகள் நட்டத்தில் இயங்குகிறதோ அந்தத்துறைகளை மூடிவிடலாம் என்ற நோக்கத்தோடு ரிவியூ மீட்டிங் நடைபெற்றது . இதில் நிதித்துறை அதிகாரிகள் அனைவரும் இருந்துள்ளனர். அப்போது பேசுகையில், ஒருவர் சிறு சேமிப்புத்துறை நட்டத்தில் சென்று கொண்டு இருக்கிறது என்று சொல்ல, உடனே அமைச்சர் ஜெயகுமார் அந்த திட்டத்தை எம்ஜிஆர் கொண்டு வந்த திட்டமாச்சே, அதனால் அதை எடுக்க வேண்டாம் என்று சொல்லியுள்ளார்.

ஆனால் அரசுக்கு செலவு செய்யாமல் நிதியை பெற்று தந்த இந்த துறையை கலைஞர் தொடங்கியது என்ற ஒரே காரணத்தாலேயே அங்கு நடந்த அத்துனைப்பணிகளையும் தற்போது தனியாருக்கு வார்த்துவிட்டு இங்கு எந்த வேளையும் இல்லையே இது எதற்கு செயல்படுகிறது என்பது போல பிம்பத்தை உருவாக்கி இதை தனியாருக்கு விற்பனை செய்யப் போகிறார்கள்.

இதை வாங்கும் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் நிறுவனம் ஏற்கனவே 30 வருடங்களாக மூன்று ஏக்கர் நிலத்தை அரசு ஒரு வருடத்திற்கு வெறும் 3000 ரூபாய்க்கு வாடகைக்கு கொடுத்துள்ளது. ஆனால் இந்த நிறுவனமோ ஒரு மாணவரிடம் ஒரு வருடத்திற்கு 31/2 லட்சம் ரூபாயாக கட்டணம் செலுத்துகின்றனர். இதில் பணிபுரியும் நிர்வாகிகளுக்கு குறைந்தபட்சமாகவே ஒரு லட்சம் வீதம் கொடுக்கப்படுகிறது.

தற்போது இந்த நிறுவனத்தின் இயக்குனராக இருப்பவர் கிருஜா வைதியநாதன் அப்பா என்பதால் தற்போது அரசு தகவல் தொகுப்பு விவர மையம் மூடும் நிலையில் அந்த இடத்தையும் தன்வசம் கொண்டுவர கிரிஜா வைத்தியநாதன் மூலமாக தற்போது காய் நகர்த்தியுள்ளாராம்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT