ADVERTISEMENT

என் பிள்ளையை பலிக்கொடுத்துட்டு நிக்கிறேன்... என் பேரனை ஏன் இழுக்குறீங்க... கதறும் காடுவெட்டி குரு தாயார்

11:20 AM Nov 14, 2018 | rajavel

குருவின் மகன் கனலரசன், குருவின் தாயார் கல்யாணிம்மாள்



உறவினர்களிடம் இருந்து தனது தாயை மீட்டுத் தாருங்கள் என்று மறைந்த காடுவெட்டி குருவின் மகன் கனலரசன் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்களுக்கு கோரிக்கை விடுக்கும் வீடியோ காட்சி வாட்ஸ் அப்புகளில் பரவியது. இந்த நிலையில் காடுவெட்டி குருவின் தாயார் கல்யாணியம்மாள், குரு இறந்த பிறகு என்ன செஞ்சீங்க, என் பேரனை ஏன் இழுக்குறீங்க என்று பா.ம.க மாநிலத் துணைப் பொதுச் செயாலாளர் வைத்தியிடம் கடும் கோபமாக பேசும் வீடியோ காட்சி தற்போது வாட்ஸ் அப்புகளில் பரவுகிறது. இது பாமகவினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

அந்த வீடியோவில்,

ADVERTISEMENT

குருவின் தாயார் : என் பிள்ளை செத்ததில் இருந்து நீ என்ன உதவி செஞ்சியிருக்க. என் பேரனை ஏன் இழுக்குறீங்க.

வைத்தி : நான் கூப்பிடல... கனலா போன் பண்ணி அய்யாவ பாக்கணுமுன்னு சொன்னாரு... கேளுங்க...


குருவின் தாயார் : என் பேரனைப் பத்தி எனக்கு தெரியும். இழுத்துக்கொண்ட வைச்சிக்கிட்டு என்ன வேணுமானாலும் செய் அவன... நா வேணாங்கல


வைத்தி : நான் இனிமே கூப்பிடல... இனிமே நா பேசவேயில்ல...


குருவின் தாயார் : என் குடும்பத்திற்கு ஏன் தீங்கு நினைக்கிற


வைத்தி : நான் எந்த காலத்திலும் நினைக்க மாட்டேன்.


குருவின் தாயார் : உன் குடும்பத்துக்கு நாங்க நினைச்சோமா... நினைச்சிக்கிட்டுத்தானே இருக்கே... அந்த செல்லைப்போட்டு காட்டு எல்லாத்துக்கிட்டேயும், காட்டு எல்லோரும் பாக்கட்டும் (உடனிருந்தவர்களிடம்)


வைத்தி : நான் துரோகம் பண்ணிருந்தா ஆண்டவன் ஒருத்தன் இருக்கான்.


குருவின் தாயார் : கொடுத்த காச ஒரு லட்ச ரூபாய இன்னும் தராம இருக்க.


வைத்தி : நான் தான் 90 ஆயிரம் தரேன்னு சொல்லியிருக்கேன்.


தொடர்ந்து இவ்வாறு மாறி மாறி பேசிக்கொள்கிறார்கள்.




மேலும் அந்த வீடியோவில், என் குடும்பம் நிலவரம் அனைவருக்கும் தெரியும். இவருக்கும் (வைத்தி) தெரியும். இப்போ ஒன்னுமில்லாமல் நிற்கிறோம். என் பிள்ளைதான் வெறும் ஆளா இருந்தவன். ஆளாளுக்கு கொள்ளையடிச்சீங்க. எங்கள அம்போன்னு விட்டுட்டு போனது எம்பிள்ளைதான். என் பிள்ளையை பலிக்கொடுத்துட்டு நிக்கிறேன். கட்சி கட்சின்னு வந்து என் குடும்பத்தையே அழிச்சவங்க நீங்க. துரோகம் பண்ணாதீங்க. என் பிள்ளை செத்த அன்னைக்கு பாத்த இவங்கள, அதுக்கப்புறம் இன்னைக்கு பாக்கிறேன். ஒரு வருஷத்துக்குள்ள உங்க குடும்பமெல்லாம் என்ன பாடுபடப்போகுதுன்னு பாருங்க. கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறீங்க. என்ன கொடுத்து உதவுனீங்க. யாராவது கொடுத்து உதவுனாகூட, கொடுக்காதீங்கன்னு சொல்றீங்க. அவுங்க அப்படி வாழுறாங்க, இப்படி வாழுறாங்கன்னு சொல்றீங்க. என்ன நாங்க வாழுறோம். என் வீட்டுல வந்து பாருங்க. ஒரு பிள்ளை வைச்சிருந்தேன். பலி கொடுத்துட்டு உட்காருக்கிறேன். ஒருத்தராவது ஆறுதல் வார்த்தை சொல்லிருப்பார்களா... நடவு நட காசு இல்ல... அவன் பேரைச் சொல்லி எம்மா பணம் வசூல் பண்ணீங்க, 10 ரூபா பணம் கொடுத்தீங்களா... இன்னைக்கு வைத்தின்னு பேர் எடுத்தியே யாரால.. என தலையில் அடித்துக்கொண்டு அழுகிறார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT