ADVERTISEMENT

"உன்னுடைய வலி என்றால் நீதான் குரல் கொடுக்க வேண்டும்!" - பா.ரஞ்சித்

06:31 PM May 03, 2018 | santhoshkumar

ADVERTISEMENT

ADVERTISEMENT

தென்னிந்திய திரையுலக பெண்கள் சங்கத்தின் தொடக்க விழாவில் இயக்குனர் பா. ரஞ்சித் கலந்துகொண்டு பேசியது," முதலில் மே தின நல்வாழ்த்துக்கள். பெண்களுக்காக பெண்களே பேச தொடங்கும் சங்கம். நம் சமூகத்தில் நான் உனக்காக பேசுவேன் ஆனால் நீ பேச கூடாது என்கிற சமூகத்தில் நாம் இருக்கிறோம். ஒடுக்குமுறை என்பது சாதி, மதம் என்று பல்வேறு விதமாக இருக்கிறது. ஆனால், பெண்களின் மீதான ஒடுக்குதல் என்பது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது.

ஏதோ உறவுகளால் ஒரு பெண் தினசரி ஒடுக்குமுறைக்கு ஆளாக்கப்பட்டுத்தான் இருக்கிறார்கள். இந்த சமூகத்தில் ஒடுக்கப்படுவதை, ஒடுக்கப்படுபவர்களே அதை ஏற்றுக்கொள்கிறார்கள். அப்படி ஒடுக்கப்படுபவர்களை எதிர்க்கும் சங்கமாக தான் இதனை பார்க்கிறேன். இந்த சங்கம் வீரியமாக செயல்பட வேண்டும். ஒவ்வொரு காலக்கட்டத்திலும் பெண்களின் ஒடுக்குமுறை அதிகரித்துக்கொண்டே வருகிறது. ஆதலால், இந்த சங்கம் அவர்களுக்காக போராடும் என்று நம்புகிறேன். ஒடுக்குமுறைக்கு எதிராக போராட்டங்கள் பலவிதமான வடிவங்களில் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது. இதனால் மாற்றம் ஏதேனும் இருக்கிறதா என்றால் மிகவும் சொற்பமான சதவீதத்தில் தான் இருக்கிறது. பெண்களின் மீதான பாலியல் சுரண்டல்கள் கூட ஒப்புக்கொள்ளப்பட்ட ஒரு வடிவமாகவே இருக்கிறது. இன்றும் வீட்டை விட்டு வெளியே சென்று வேலை பார்ப்பதனால் தான் பெண்கள் பாலியல் ரீதியாக சுரண்டல்களுக்கு ஆளாக்கப்பட்டு வருகிறார்கள் என்று நாம் நம்புகின்றோம். அப்படிப்பட்ட சமூகத்தில் தான் நாமும் இருக்கிறோம். இதெல்லாம் நம்மிடம் இயல்பாகவே இருக்கிறது. சமீபத்தில் கூட பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பெண்ணின் உடை தான் வன்கொடுமைக்கு காரணம் என்று சொல்லப்பட்டது.

அப்போது குழந்தைகளும் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுகிறார்களே, அதற்கு காரணமும் உடை, நடத்தைதானா? இந்த ஏற்றுக்கொள்ளப்படுகிற வடிவம் உடைக்கப்பட வேண்டும். ஏற்றுக்கொள்ள மறுக்கும் ஆட்களாக நாம் மாற வேண்டும். இச்சங்கமும் அப்படி ஏற்றுக்கொள்ள மறுக்கும் என்று நம்புகிறேன். தொண்டை கிழிய கிழிய கத்தினால்தான், நாம் நம்முடைய உரிமைகளை பெற முடியும். உன்னுடைய பிரச்சனையை என்னிடம் சொல்லு நான் அதை பார்த்துக்கொள்கிறேன் என்பதே முட்டாள்தனமான ஒன்று. உன்னுடைய பிரச்சனை, உன்னுடைய வலி என்றால் நீதான் குரல் கொடுக்க வேண்டும். நிச்சயமாக எங்களை போன்று நிறைய நபர்கள் உங்களுக்கு துணையாக நிற்பார்கள் "என்று கூறினார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT