/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Untitled-3_27.jpg)
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் பா.ரஞ்சித். இவர் 'நீலம் புரொடக்சன்ஸ்' என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர் தயாரிப்பில் 'பரியேறும் பெருமாள்', 'இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு', 'ரைட்டர்' மற்றும் 'குதிரைவால்' போன்ற படங்கள் வெளியாகியுள்ளன. அடுத்ததாக 'J.பேபி' மற்றும் 'சேத்துமான்' படங்கள் உருவாகி வருகிறது. இதில் 'சேத்துமான்' படம் மே 27-ஆம் தேதி 'சோனி லைவ்' ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. பா.ரஞ்சித் 'சார்பட்டா பரம்பரை' படத்திற்கு பிறகு'வேட்டுவம்' படத்தை இயக்குவதோடுதயாரித்தும் வருகிறார்.
'J.பேபி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி பலரின் கவனத்தை ஈர்த்த நிலையில் தற்போது இப்படத்தின் டீசர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன் படி இப்படத்தின் டீசர் மே 21-ஆம் தேதி வெளியாகவுள்ளது.'அட்டகத்தி' தினேஷ் நடிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் சுரேஷ் மாரி இயக்கியுள்ளார். ஊர்வசி மற்றும் லொள்ளு சபா மாறன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். டோனி பிரிட்டோ என்பவர் இசையமைக்கிறார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)