ADVERTISEMENT

'காடுவெட்டி’ குரு மறைவு... -ஜி.கே. வாசன், பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி

10:16 AM May 27, 2018 | kamalkumar

ADVERTISEMENT

ADVERTISEMENT

வன்னியர் சங்க தலைவரும், பாமக முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான காடுவெட்டி ஜெ.குரு வெள்ளிக்கிழமை உடல் நலக் குறைவால் காலமானார். சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து அவரது உடல் சொந்த ஊரான அரியலூர் மாவட்டம், காடுவெட்டி கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இன்று குருவின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ஆகியோர் காடுவெட்டி கிராமத்திற்கு சென்றனர். இதைத்தொடர்ந்து தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன், மத்திய இணை அமைச்சர். பொன்.ராதாகிருஷ்ணன், மேல்மருவத்தூர் செந்தில் உள்ளிட்டோர் இன்று நேரில் அஞ்சலி செலுத்தினர்.

ஜெ. குருவின் இறுதிச் சடங்குகள் இன்று காலை 10 மணிக்கு காடுவெட்டி கிராமத்தில் நடைபெறுகிறது என்றும், இதில் ராமதாஸ், அன்புமணி இராமதாஸ் உள்ளிட்டோர் கலந்துகொள்கிறார்கள் என பாமக தலைமை நிலையம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT