ADVERTISEMENT

நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு!

07:48 AM Jul 15, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

வெளிநாட்டு சொகுசு காருக்கு வரி செலுத்த தாமதம் ஆனதால் விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்ய வேண்டுமென நடிகர் விஜய் தரப்பில் தொடரப்பட்ட வழக்கில் தனி நீதிபதி தெரிவித்த கருத்து சர்ச்சை ஏற்படுத்தி இருந்தது. இந்தநிலையில் வெளிநாட்டு சொகுசு கார் தொடர்பான வழக்கில் இன்று நீதிமன்றம் தீர்ப்பளிக்க இருக்கிறது.

கடந்த 2005 ஆம் ஆண்டு அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட bmw x5 காருக்கு நுழைவு வரி செலுத்த நடிகர் விஜய்க்கு தமிழக அரசின் வணிகவரித்துறை உத்தரவிட்டது. இதை எதிர்த்து நடிகர் விஜய் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், நுழைவு வரி வசூலிக்க மாநில அதிகாரங்கள் இல்லை என்ற உத்தரவு பிறப்பித்து இருந்தது. காருக்கு 7 லட்சத்து 98 ஆயிரத்து 75 ரூபாய் நுழைவு வரி செலுத்தப்பட்ட நிலையில் இடைப்பட்ட காலத்திற்கு 30 லட்சத்து 23 ஆயிரம் ரூபாய் அபராதமாகச் செலுத்த வேண்டும் என வணிகவரித்துறை உத்தரவிட்டது. 2 சதவிகிதம் வரி விதிப்பதற்குப் பதிலாக 400 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக வணிகவரித்துறையின் வரிவிதிப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் நடிகர் விஜய் வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்த வழக்கில் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT