ADVERTISEMENT

ஜோலார்பேட்டையில் இருந்து சென்னை வந்தது குடிநீர் ரெயில்

02:10 PM Jul 12, 2019 | rajavel


ADVERTISEMENT

சென்னை குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரெயிலில் குடிநீர் கொண்டு வர அரசு ரூ.65 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை மேற்கொண்டது.

ADVERTISEMENT


அதன்படி பல்வேறு துறையை சேர்ந்த ஊழியர்கள் கடந்த 10 நாட்களாக தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் 50 வேகன்களில் 25 லட்சம் லிட்டர் தண்ணீர் ஏற்றப்பட்ட முதல் ரெயில் இன்று காலை 7 மணியளவில் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு புறப்பட்டது. தமிழ்நாடு குடிநீர் வாரிய நிர்வாக இயக்குநர் மகேஷ் கொடியசைத்து குடிநீர் ரெயிலை தொடங்கி வைத்தார். இந்த ரெயில் சென்னையில் உள்ள வில்லிவாக்கத்துக்கு 11.30 மணியளவில் வந்ததது.


இந்த ரெயில் மூலம் வந்துள்ள தண்ணீர் வில்லிவாக்கம் ரெயில் நிலையம் அருகில் அமைக்கப்பட்டுள்ள குழாய்கள் மூலம் கீழ்ப்பாக்கம் நீரேற்றும் நிலையத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு இந்த தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு விரைவில் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட உள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT