ADVERTISEMENT

20 ஆண்டுக்கு பின் குடும்பத்துடன் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்டவர்..! சென்னையில் நெகிழ்ச்சி சம்பவம்..!

11:10 AM Jan 11, 2020 | rajavel

ADVERTISEMENT

சட்டிஸ்கர் மாநிலத்தில் இருந்து உறவினர்களை பிரிந்து 20 ஆண்டுகளாக தமிழகத்தில் இருந்த மனநலம் பாதிக்கப்பட்ட நபர், மாநில குற்ற ஆவண காப்பக உதவியுடன் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டார்.

ADVERTISEMENT



சட்டீஸ்கர் மாநிலம் கோகடி கிராமத்தை சேர்ந்தவர் கௌசரண்(65). மனநலம் பாதிக்கப்பட்ட இவர் 20 ஆண்டுகளுக்கு சுயநலம் இல்லாமல் தவறுதலாக சென்னை வவ்துள்ளார். பெரம்பலூரில் உள்ள வேலா கருணை இல்லத்தில் இருந்த அவர் குறித்த தகவல் பெரம்பலூர் மாவட்ட ஆட்கடத்தல் தடுப்பு பிரிவு உதவி ஆய்வாளர் விஜயலட்சுமி மூலம் மாநில குற்ற ஆவண காப்பாகத்துக்கு கிடைக்கப்பெற்றது.


இதனையடுத்து தகவல்களை கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டதில் கௌசரண் காணாமல் போனது குறித்து சட்டீஸ்கர் மாநிலம் கோட்டா காவல்நிலையத்தில் குடும்பத்தார் புகார் அளிக்கப்பட்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. பின்னர் அங்குள்ள அதிகாரிகிகளை தொடர்பு கொண்ட மாநில குற்ற ஆவண காப்பக ஆய்வாளர் தாஹிரா, கௌசரண் உறவினர்களான அஜுராம், ராம்குமார் ஆகியோரை சென்னை வரவழைத்து கௌசரணை அவரது குடும்பத்தாருடன் சேர்த்து வைத்துள்ளனர். போலீஸ்சாருக்கு நெகிழ்ச்சியான நன்றியை தெரித்த அவரது குடும்பத்தார் அவரை சொந்த மாநிலத்திற்க்கு அழைத்து சென்றனர்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT