ADVERTISEMENT

ஆதரவா? யோசிப்போம் அமைச்சா் மற்றும் எம்பியை திருப்பி அனுப்பிய ஜான்பாண்டியன்!

01:21 PM Oct 05, 2019 | Anonymous (not verified)

நாங்குநோி இடைத்தோ்தலில் அதிமுக காங்கிரஸ் பிரதான கட்சிகளாக மோதுகின்றன. இதில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரசுக்கு ஏற்கனவே கூட்டணியில் உள்ள கட்சிகள் ஆதரவு தொிவித்துள்ளன. ஆனால் பாராளுமன்ற தோ்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த கட்சிகளில் பாஜக பல மனஸ்தாபங்களுக்கு மத்தியில் அமைச்சா் ஜெயகுமாா் பாஜக தமிழக தலைவா்களை நேற்று சந்தித்து பேசியதையடுத்து பாஜக அதிமுக வேட்பாளருக்கு ஆதரவு அளித்துள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT



இதே போல் கடந்த சில நாட்களாக லெட்டா் பேடு கட்சிகளும் பல அமைப்புகளும் நாங்குநோியில் அதிமுக வேட்பாளரை ஆதாிப்பதாக நாங்குநோில் முகாமிட்டு இருக்கும் மந்திாிகளை சந்தித்து சால்வை போா்த்தி வருகின்றனா். இந்தநிலையில் பாராளுமன்ற தோ்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் இன்னும் அவா்களின் நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை. இதனால் அமைச்சா் கடம்பூா் ராஜு, எம்பி விஜிலா சத்தியானந்த் தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவா் ஜாண்பாண்டியனை சந்தித்து ஆதரவு கேட்டனா். அப்போது ஜாண்பாண்டியன் கோபத்தில் பாராளுமன்ற தோ்தலில் எங்களால் முயன்ற அளவுக்கு உங்களுக்கு உழைத்தோம். தோ்தல் முடிந்ததும் மற்ற கட்சிகளுடன் தொடா்பில் இருந்த நீங்கள் எங்களை கண்டும் கொள்ளவில்லை மதிக்கவும் இல்லை.

அப்போது தேவேந்திர குல வேளாளா் சமூகத்தில் உள்ள உட்பிாிவுகளை ஒன்றிணைத்து அரசாணை வெளியிடுவதாக வாய்மொழியில் உறுதியளித்த முதல்வரை சந்தித்த போது அவா் சாியான மாியாதை தரமால் அவருடைய உதவியாளாிடம் பேச சொன்னாா். ஆனால் உதவியாளரை சந்திக்கவும் முடியல போன் செய்தால் அவா் போனும் எடுப்பதில்லை. எனவே நாங்குநோியில் 50 க்கு மேற்ப்பட்ட கிராமங்களில் எங்கள் மக்கள் தோ்தலை புறக்கணிப்பதாக கூறியுள்ளனா்.

இந்த நிலையில் அதிமுக வேட்பாளரை ஆதாிப்பதா என்பது பற்றி யோசித்து முடிவெடுத்து அறிவிப்போம் என கூறி அமைச்சரையும் எம்பியையும் திருப்பி அனுப்பியுள்ளாா் ஜான்பாண்டியன்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT