ADVERTISEMENT

நகைக்கடை கொள்ளையனை பிடித்த திருவாரூர் காவல் உதவி ஆய்வாளருக்கு பாராட்டு!

11:30 PM Oct 04, 2019 | santhoshb@nakk…

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள லலிதா ஜூவல்லரி நகைக் கடையில் சுவற்றை துளையிட்டு 13 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம், வைரம்,பிளாட்டினம் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ADVERTISEMENT


தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், தடயங்களை சேகரித்தும், தடவியல் நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் கொள்ளையர்களை பிடிக்க தீவிர முயற்சி மேற்கொண்டனர். மேலும் இன்ஸ்பெக்டர் தலைமையில் 7 தனிப்படை அமைத்து திருச்சி, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

ADVERTISEMENT


இந்நிலையில் திருவாரூர் போலீசார் நடத்திய வாகன சோதனையின் போது, மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் தப்பி ஓட முயன்ற போது மணிகண்டன் என்பவன் பிடிபட்டான். அவனிடம் இருந்த தங்க நகைகளையும் மீட்ட போலீசார், தப்பி ஓடிய சீராதோப்பு சுரேஷை தேடி வருகிறார்கள். பிடிப்பட்ட திருடனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த சம்பவத்திற்கு திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த கொள்ளையன் முருகன் தலைவனாக செயல்பட்டதையும் கண்டறிந்த போலீசார், முருகன் உட்பட 7 பேரை தீவிரமாக தேடி வருகின்றன.


இதனையடுத்து இன்று (04/10/2019) நகைக்கடை கொள்ளையில் தப்பியோடிய சீராதோப்பு சுரேஷ் கைது செய்யப்பட்டுள்ளான். திருவாரூர் ஆயுதப்படை மைதானத்தில் உள்ள அலுவலகத்தில் சுரேஷ் உறவினர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நகை கொள்ளை சம்பவம் நடைபெற்ற 48 மணி நேரத்தில் குற்றவாளிகள் பிடிபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இது தொடர்பான வழக்கில் சிறப்பாக செயல்பட்டு திருச்சி நகைக்கடை கொள்ளையனை பிடித்த, திருவாரூர் காவல் உதவி ஆய்வாளர் பாரத நேரு உள்ளிட்டோருக்கு, திருச்சி மத்திய மண்டல ஐஜி வரதராஜூ, சான்றிதழ் மற்றும் வெகுமதி அளித்து பாராட்டினார். மேலும் திருச்சி மாநகர மக்களும் காவல்துறைக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றன.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT