ADVERTISEMENT

'ஜெய்பீம்' திரைப்பட விவகாரம்: பா.ம.க. எம்.பி. அன்புமணி ராமதாஸுக்கு தென்னிந்தியத் திரைப்பட வர்த்தகச் சபை கோரிக்கை!

10:15 PM Nov 15, 2021 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

அரசியல், ஜாதி, மத சார்பின்றி கல்விப் பணியில் கலங்கரை விளக்காக செயலாற்றி வரும் சூர்யாவை விமர்சிப்பதை தவிர்க்கும்படி, பா.ம.க.வின் இளைஞரணித் தலைவரும், எம்.பி.யுமான அன்புமணி ராமதாஸுக்கு தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக, அன்புமணி ராமதாஸுக்கு தென்னிந்திய திரைப்பட வர்த்தகச் சபை இன்று (15/11/2021) எழுதியுள்ள கடிதத்தில், "நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியான 'ஜெய்பீம்' திரைப்படத்தில் தொழில்நுட்ப கலைஞர்களால் காண்பிக்கப்பட்ட தங்கள் கட்சியின் முத்திரையை நீங்கள் அடையாளப்படுத்தி அதை நீக்க வேண்டுமென வேண்டுகோள் வைத்தீர்கள். எங்களுடைய தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் உறுப்பினர் சூர்யா, உங்கள் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அந்தக் காட்சியை உடனடியாக நீக்கிவிட்டார்.

அந்த முத்திரையைப் படத்தில் பயன்படுத்தியதில் தயாரிப்பு நிறுவனத்திற்கோ படத்தின் கதாநாயகன் சூர்யாவிற்கோ எள்ளளவும் தொடர்பு இல்லாத நிலையில் உங்கள் கட்சியினர் சூர்யாவை தொடர்ந்து விமர்சித்து வருவது எங்கள் தென்னிந்திய திரைப்பட வர்த்தகச் சபைக்கு மிகுந்த வருத்தத்தை அளித்துள்ளது. அரசியல், ஜாதி, மத, இன சார்பு இன்றி சமூக அக்கறையோடு ஈகை குணத்துடன், விளிம்பு நிலை மாணவர்கள் மீது விருட்சமான பார்வை கொண்டு கல்விப் பணியில் கலங்கரை விளக்காய் செயலாற்றி வரும் சூர்யாவை விமர்சிப்பதைத் தவிர்க்கும்படி வருத்தத்துடன் வேண்டி கேட்டுக்கொள்கிறோம்". இவ்வாறு கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT