ADVERTISEMENT

3வது நாளாக ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் போராட்டம்

12:14 PM Jun 13, 2018 | rajavel

ADVERTISEMENT

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மேலும், சம்பள உயர்வு மற்றும் பல்வேறு அம்சங்களை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கடந்த சில மாதங்களாக போராடி வருகிறார்கள்.

ADVERTISEMENT

இந்த நிலையில் மேற்படி கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி நேற்று முன்தினம் ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் உயர்மட்ட குழு நிர்வாகிகள் சென்னை எழிலகத்தில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்கள். இந்த போராட்டத்தில் 50 பெண்கள் உள்பட 250 பேர் பங்கேற்றுள்ளனர்.
நேற்று அவர்களது உண்ணாவிரத போராட்டம் 2-வது நாளாக தொடர்ந்தது. தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று எழிலகத்துக்கு சென்று ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகளை சந்தித்து அவர்களது போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார். அதுபோல நேற்று நள்ளிரவு காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் லீக் தலைவர்களும் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

இந்த நிலையில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் போராட்டம் இன்று (புதன் கிழமை) 3-வது நாளாக நீடித்தது. இன்று அமமுக துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், சிபிஎம் டி.கே. ரங்கராஜன் ஆகியோர் ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT