Skip to main content

கிரிஜா வைத்தியநாதன் எச்சரிக்கையையும் மீறி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டம்

Published on 04/10/2018 | Edited on 04/10/2018
JACTTO-GEO


8வது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்துவது, பழைய ஓய்வூதிய முறையையே தொடர வேண்டும் உள்ளிட்ட 3 கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறது. 

 
மேலும் ஜாக்டோ ஜியோ உயர்மட்ட குழுவில் அக்டோபர் 4ஆம் தேதி ஒரு நாள் ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்செயல் விடுப்பு குறித்து அரசு ஊழியர்களுக்கு ஜாக்டோ ஜியோவில் உள்ள சங்கங்கள் அழைப்பு விடுத்தன.  
 

இந்த நிலையில் பல்வேறு துறை செயலாளர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் சுற்றறிக்கை அனுப்பியிருந்தார். அதில், ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு அரசு அலுவலகப் பணிகளை பாதிக்கும் என்பதால் அனுமதியின்றி எடுக்கப்படும் விடுப்புக்கு ஊதியம் வழங்கப்படாது என உத்தரவிட்டுள்ளார். மேலும் அன்றைய தினம் அனைத்து அலுவலக வருகைப் பதிவு நிலையை காலை 10.30 மணிக்குள், கிராம, தாலுகா, மாவட்டங்களில் உள்ள அதிகாரிகள் சேகரிக்க வேண்டும். பின்னர் அதை தலைமை செயலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். எனினும் உரிய காரணங்கள் இருப்பின் உண்மைத் தன்மையை அறிந்து விடுப்பு அளிக்கலாம் என்றும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
 

இருப்பினும் திட்டமிட்டப்படியே ஒரு நாள் ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு எடுத்து ஜாக்டோ ஜியோ அமைப்பினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 

 

 

சார்ந்த செய்திகள்