
தமிழகத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த சில தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இன்று (10/05/2021) காலை 04.00 மணி முதல் மே 24ஆம் தேதி காலை 04.00 மணிவரை 15 நாட்களுக்குத் தமிழகத்தில் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது.
தமிழகத்தில் ஒரே நாளில் 2,978 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று சென்னையில் ஒரே நாளில் 7,149 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி தமிழகத்தில் 232பேர் கரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர். அரசு மருத்துவமனைகளில் 134 பேரும்தனியார் மருத்துவமனைகளில் 98 பேரும்கரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர்.இதனால் தமிழகத்தில் கரோனா உயிரிழப்பு மொத்த எண்ணிக்கை 15,880 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் கரோனா நிதியாக தமிழக அரசுக்கு 150 கோடி ரூபாய் வழங்க ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், பணியாளர்களின் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு ஒருநாள் ஊதியத்தைக் கரோனா நிதியாக வழங்க முடிவு செய்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)