ADVERTISEMENT

'ஆட்சியாளர்கள் இப்படி கூறுவது வேடிக்கையாக இருக்கிறது' - சசிகலா விமர்சனம்!

10:02 AM Nov 08, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

சென்னையில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ள நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (07/11/2021) சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழை சேதங்களைப் பார்வையிட்டார். அத்துடன் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார். அதேபோல், சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு செய்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், "புரசைவாக்கம், வில்லிவாக்கம், கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மழையின் காரணமாகத் தண்ணீர் தேங்கியுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் இன்று (08/11/2021) மற்றும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வெளியூர் மக்கள் சென்னை வருவதை இரண்டிலிருந்து மூன்று நாட்கள் தவிர்க்க வேண்டும். தீபாவளிக்காக ஊருக்குச் சென்றுள்ள மக்கள், மூன்று நாட்கள் கழித்து சென்னை வர வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எனக் குறிப்பிட்டு சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில், 'சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணத்தைத் தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும். வெள்ள பாதிப்புகளைப் போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு சீர் செய்ய வேண்டும். வெளியூர் சென்றவர்கள் சென்னைக்கு வர வேண்டாம் என ஆட்சியாளர்கள் கூறுவது வேடிக்கையாக இருக்கிறது. வெளியூர் சென்றவர்கள் சென்னையில் உள்ள வீடு மற்றும் உடைமைகளைப் பாதுகாக்க வரத்தானே செய்வார்கள். அவர்களையும் அரசு பாதுகாக்க வேண்டும். வெள்ளம் இல்லாத சென்னை உருவாக்க வேண்டும் என 2016 ஆம் ஆண்டு ஜெயலலிதா கொடுத்த வாக்குறுதி விரைவில் நிஜமாக வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT