ADVERTISEMENT

திருமா தோழர் என் படத்த பார்த்தாலே போதும்! - மேடையில் நெகிழ்ந்த இயக்குனர் ஜெயச்சந்திர ஹஷ்மி!

03:19 PM Oct 02, 2022 | santhoshb@nakk…

ADVERTISEMENT

'தமிழ் ஸ்டூடியோ அமைப்பு' ஏற்பாடு செய்திருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் தொகுதியின் மக்களவை உறுப்பினருமான தொல்.திருமாவளவனின் பிறந்தநாள், மணி விழா மற்றும் குறும்படம், ஆவணப்படம் கலை விழா நேற்று (01/10/2022) மாலை 05.30 மணியளவில் சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் நடைபெற்றது. கவிஞர் ராசி அழகப்பன் தலைமையில் நடைபெற்ற விழாவில், தொல்.திருமாவளவன் எம்.பி., நடிகர்கள் ராஜேஷ், இளவரசு, இயக்குனர் வெற்றிமாறன் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

ADVERTISEMENT

விழாவில் சிறந்த குறும்படங்கள், ஆவணப்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, 38 இளம் இயக்குநர்களுக்கு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கிய தொல்.திருமாவளவன் எம்.பி. அவர்களைப் பாராட்டினார். இதில், ஜெயச்சந்திர ஹஷ்மி இயக்கத்தில் உருவான 'ஸ்வீட் பிரியாணி' சிறந்த குறும்படமாகத் தேர்வு செய்யப்பட்ட நிலையில், அந்த குழுவினருக்கும் சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கிப் பாராட்டினார்.

விழாவில் பேசிய, 'ஸ்வீட் பிரியாணி' குறும்படத்தின் இயக்குநர் ஜெயச்சந்திர ஹஷ்மி, "ஸ்வீட் பிரியாணி படம் அனுப்பும் போதே விழா நடத்தும் நண்பர்களிடம் கூறினேன். ஒருவேளை என்னுடைய படம் தேர்வு செய்யப்பட்டால், திருமா தோழர் முன்னாடி திரையிட்டாலே போதும்; அதைவிட பெரிய விருது இல்லை என்று கூறினேன். அதுவும் நடந்து, விருதும் கிடைத்தது மிக்க மகிழ்ச்சி. இயக்குநர் வெற்றிமாறன் சார் எனக்கு மாஸ்டர் மாதிரி. படம் திரையிட்ட பின் அவரின் ரியாக்ஷ்ணை கவனித்தேன். அப்போது, படத்தைப் பார்த்து வெற்றிமாறன் ஆங்காங்கே புன்னகைத்தது மிகுந்த சந்தோஷமாக இருந்தது" என்றார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT