ADVERTISEMENT

தி.மலை கோயில் எதிரில் வணிக வளாகம் கட்டும் விவகாரம்; உயர்நீதிமன்றம் அதிரடி

05:32 PM Nov 10, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் கோபுரம் எதிரே வணிக வளாகம் கட்டும் பணிகளுக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் ராஜகோபுரம் எதிரே இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வணிக வளாகம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்கான பணிகளை பொதுப்பணித்துறை மேற்கொண்டு வந்தது. இந்த சூழலில் அருணாச்சலேஸ்வரர் கோயில் ராஜகோபுரம் எதிரே வணிக வளாகம் கட்டப்பட்டால் ராஜகோபுரம் சேதமாகலாம், கோபுர தரிசனம் தடுக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்ற சிறப்பு அமர்வில் டி.ரமேஷ், வழக்கறிஞர் ஜெகன்நாத், ரங்கராஜன் நரசிம்மன் ஆகியோர் அவசர முறையீடு செய்திருந்தனர்.

இந்நிலையில் இது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு அமர்வு முன்பு இன்று (11.10.2023) விசாரணைக்கு வந்தது. அப்போது ரூ.6 கோடி மதிப்பீட்டில் வடகிழக்கு, தென்கிழக்கில் 150 கடைகளை கொண்ட இரண்டு அடுக்குமாடி கட்டடம் மட்டுமே கட்டப்படுவதால் தரிசனமோ, கட்டுமானமோ பாதிக்கப்படாது என இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வாதிடப்பட்டது. இதற்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அருணாச்சலேஸ்வரர் கோயில் கோபுரம் எதிரே வணிக வளாகம் கட்டுவதற்கு தடை விதிக்கப்படுகிறது. உத்தரவு பிறப்பித்த நிமிடத்தில் இருந்து தடை உத்தரவு அமலுக்கு வருகிறது. வணிக வளாகம் கட்டுவது தொடர்பாக எந்த பணியும் செய்யக்கூடாது என உத்தரவிட்டுள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT