/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/tvm-deepam.jpg)
கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கருவறை முன்புள்ள மண்டபத்தில் இன்று அதிகாலை பரணி தீபம் ஏற்றப்பட்டது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்களை முழங்க அண்ணாமலையாருக்கு அரோகரா முழக்கத்துடன் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதற்காகக் கோயிலுக்குள் 5 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
இதனையடுத்து கோயிலின் பின்புறம் உள்ள 2 ஆயிரத்து 668 அடி உயர மலை உச்சியின் மீது இன்று மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்படுகிறது. இந்த மகா தீபம் 11 நாட்களுக்குத்தொடர்ந்து எரிவதற்காக 4 ஆயிரத்து 500 கிலோ நெய்யும், 1500 மீட்டர் காடா துணியும் பயன்படுத்தப்பட உள்ளன. இந்நிலையில் மலை ஏறுவதற்கான அனுமதிச் சீட்டை ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கிச் செல்கின்றனர். முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் 2,500 பக்தர்களுக்கு அனுமதிச் சீட்டு வழங்கப்பட உள்ளது.
தீபத் திருவிழாவை காண்பதற்காக 35 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு மற்றும் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் சுமார் 14 ஆயிரம் காவலர்கள் ஈடுபட்டுள்ளனர். பக்தர்களுக்கு உதவுதற்காக அவசர உதவிக்கு தொடர்பு கொள்ள044-28447703, 044-28447701, 8939686742 என்ற தொலைப்பேசி எண்கள் காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் குழந்தைகள் காணாமல் போனால்அதுகுறித்து தகவல் தெரிவிக்க 9342116232 - 8438208003 என்ற தொலைப்பேசி எண்களைத்தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)