ADVERTISEMENT

கர்ப்பிணிக்கு தவறான சிகிச்சை...சாத்தூர் மருத்துவர்கள், செவிலியர்கள் மீது வழக்கு!!

05:25 PM Dec 26, 2018 | kalaimohan

கர்ப்பிணிக்கு ரத்தம் செலுத்திய சாத்தூர் அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், சிவகாசி ரத்த வங்கி ஊழியர்கள் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அரசு மருத்துவமனைகளின் தவறால், எச்.ஐ.வி. பாதிப்புக்கு ஆளாகியிருக்கும் கர்ப்பிணி முத்து, தனக்கு தீங்கிழைத்த அரசு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி சாத்தூர் நகர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

ADVERTISEMENT

அந்த மனுவில், அரசு டாக்டரின் கவனக்குறைவு எனக்கு இந்த நோய் ஏற்பட மூலகாரணம் ஆகும். அதனால், எனக்கு உடலில் அதிகவலி ஏற்பட்டது. என் உயிருக்கும் என் வயிற்றில் உள்ள 9 மாத குழந்தைக்கும் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திவிட்டார்கள். அரசு டாக்டரின் கவனக்குறைவினால், நான் நிரந்தர எச்.ஐ.வி. நோயாளியாக ஆக்கப்பட்டுள்ளேன். சமூகத்தில் என்னைப்பற்றி தவறுதலான எண்ணத்தை ஏற்படுத்தி, என்னைக் களங்கப்படுத்திவிட்டார்கள். நான் பட்ட மானநஷ்டத்திற்கு அரசு டாக்டர்களும், செவிலியர்களும்தான் காரணம். எனது குடும்பமே மிகவும் மனஉளைச்சலும், மன வேதனையும் அடைந்து, அவமானப்பட்டு நிற்கிறது. ஆகையால், சார்பு ஆய்வாளர் அவர்கள் எனக்கு எச்.ஐ.வி. வருவதற்குக் காரணமான, எனக்கு வைத்தியம் பார்த்த ட்யூட்டி டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் சிவகாசி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் ரத்த வங்கி ஊழியர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.’ என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் கர்ப்பிணிக்கு ரத்தம் செலுத்திய சாத்தூர் அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், சிவகாசி ரத்த வங்கி ஊழியர்கள் மீது கவனக்குறைவாக மருத்துவம் பார்த்து பாதிப்பு ஏற்படுத்துதல் உள்ளிட்ட 2 பிரிவுகளில் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT