ADVERTISEMENT

திடீரென உள்வாங்கிய கடல்; அதிர்ச்சியில் பாம்பன் மக்கள்

06:25 PM Jul 04, 2023 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

ராமேஸ்வரம் பாம்பன் பகுதியில் திடீரென கடல் உள்வாங்கியதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தெற்கு வங்கக்கடல் பகுதியில் ஏற்பட்டிருக்கும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் காற்றின் வேக மாறுபாடு காரணமாகத் தமிழகத்தில் பல இடங்களில் மழை பொழிந்து வருகிறது. இந்நிலையில் ராமேஸ்வரத்தில் பாம்பன், மண்டபம் உள்ளிட்ட தெற்கு மீன்பிடித் துறைமுகங்கள் பகுதியில் வழக்கத்திற்கு மாறாகக் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. குறிப்பாக பாம்பன் வடக்கு கடற்பகுதியில் வழக்கத்திற்கு மாறாகக் கடல் உள்வாங்கிக் காணப்படுகிறது.

இதனால் அந்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நாட்டு மற்றும் பைபர் படகுகள் தரை தட்டி நிற்கின்றன. சுனாமிக்குப் பிறகு இந்தப் பகுதிகளில் அடிக்கடி கடல் உள் வாங்குவதால் தூண்டில் வளைவு துறைமுகம் அமைத்துத் தர வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தற்பொழுது 200 மீட்டருக்கு கடல் உள்வாங்கி இருப்பதால் அந்தப் பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT