/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/m100.jpg)
அந்தமான் பகுதியில் உள்ள வங்கக்கடல் பகுதியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம்ஏற்பட்டதாகதகவல் வெளியான நிலையில் மீண்டும் இரண்டாம் முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் நிலஅதிர்வைக்கண்காணிக்கும் துறையானது இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இன்று சரியாக 3.02 மணியளவில்ரிக்டர்அளவுகோலில் 4.4 என்ற அளவில் இந்த நிலநடுக்கமானது உணரப்பட்டது. அந்தமான் தலைநகர்போர்ட்ப்ளேயரில்இருந்து 184 கிலோ மீட்டர் தொலைவில்இந்தியபெருங்கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள நிலையில், இது குறித்து சுனாமி எச்சரிக்கைகள் எதுவும் பிறப்பிக்கப்படவில்லை. அதற்கு முன்பே மதியம் 2.37 மணிநேரத்தின் பொழுது அதேபோன்று கடலில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் அந்தமான் தலைநகர்போர்ட்ப்ளேயரில்இருந்து தென்கிழக்கே 256 கிலோமீட்டர் தொலைவில் 4.7 என்றரிக்டர்அளவுகோலில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளதுஎனத்தகவல்கள் வெளியாகியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)