
தமிழகத்தில் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் திடீரென கடல் உள்வாங்கியது அந்த பகுதி மக்கள் மற்றும் மீனவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுற்றலா பயணிகளும் கடல் உள்வாங்கியதை ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.