ADVERTISEMENT

மீண்டும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி

06:14 PM Dec 14, 2022 | suthakar@nakkh…

ADVERTISEMENT


வங்கக் கடலில் உருவாகி சில நாட்களுக்கு முன்பு கரையைக் கடந்த மாண்டஸ் புயல் தமிழகத்தில் பெரிய அளவில் சேதத்தைக் கொடுக்கவில்லை என்றாலும் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் பலத்த மழையைக் கொடுத்தது. அதேபோன்று மீண்டும் இந்த மாதத்தில் புயல் உருவாக வாய்ப்புகள் அதிகம் என்று அப்போதே வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்திருந்தனர். புயல் வராமல் போனாலும் பெரிய அளவிலான மழைப்பொழிவுக்கு வாய்ப்பிருப்பதாகத் தெரிவித்திருந்தனர்.

ADVERTISEMENT

இந்நிலையில் தென்கிழக்கு வங்கக்கடல், தெற்கு அந்தமான் அதனை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதியில் புதிதாகக் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்னும் சில நாட்களுக்குப் பிறகே இது எந்த அளவுக்கு மழைப்பொழிவைக் கொடுக்கும் என்று தெரிய வரும்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT