indian  meteorological   department

Advertisment

அரபிக் கடலில் உருவான டவ்தே புயலைத்தொடர்ந்து, தற்போது வங்கக்கடலில் யாஸ் புயல் உருவாகியுள்ளது. இந்த புயலினால் கடலோர மாவட்டங்களில் பரவலாக மழைபெய்யும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. அதன்படி மழையும் பெய்து வருகிறது. இந்த புயலைத் தொடர்ந்து கடலோர மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த புயல் ஒடிசா மற்றும் மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களுக்கிடையே கரையைக் கடக்கவுள்ளதால், அம்மாநிலங்களிலும் தீவிரமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில், யாஸ் புயல் தொடர்ந்து வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் அதிதீவிர புயலாக மாறும் என்றும், நாளை அதிகாலை தம்ரா துறைமுகத்திற்கு அருகே வடமேற்கு வங்கக்கடலை அடையும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்பிறகு இந்த அதிதீவிர புயல், நாளை மதியம் வடக்கு ஒடிசா கடற்கரைக்கும் - மேற்குவங்க கடற்கரைக்கும் இடையே கரையைக் கடக்கும் என இந்திய வானிலை மையம் கூறியுள்ளது.