வங்கக்கடலில் நிலைக்கொண்டுள்ள மேலடுக்கு சுழற்சி 3 நாட்களில் தமிழகத்தை நோக்கி நகரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் நாளை (24/09/2019) மற்றும் நாளை மறுநாள் (25/09/2019) கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Advertisment

TAMILNADU MAJOR DISTRICTS HEAVY RAIN CHANCE chennai meteorological department

மேலும் கடலோர மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், கடலோர பகுதிகளில் சூறைக்காற்று வீசும் என்பதால் நாளை மற்றும் நாளை மறுநாள் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அவ்வப்போது மழை பெய்யும் என்று தெரிவித்துளளது.நாளை (24/09/2019) வேலூர், திருவள்ளூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Advertisment