ADVERTISEMENT

செம்பரம்பாக்கம் ஏரியில் மீண்டும் நீர் திறப்பு அதிகரிப்பு!

09:45 AM Nov 17, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழ்நாட்டில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று (17.11.2021) மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை பரவலாகப் பெய்துவரும் நிலையில், நாளை சென்னைக்கு சிவப்பு எச்சரிக்கை (ரெட் அலர்ட்) விடப்பட்டுள்ளது. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மீண்டும் கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து நீர் திறப்பு 1,000 கனஅடியிலிருந்து 1,500 கனஅடியாக அதிகரித்துள்ளது. கடந்த 7ஆம் தேதி முதல் கனமழை காரணமாக ஏரியில் 2,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுவந்தது. படிப்படியாக மழை குறைந்ததால் நீர் திறப்பும் குறைக்கப்பட்டது. தற்போது செம்பரம்பாக்கம் ஏரிக்கு வினாடிக்கு 405 கனஅடியாக நீர்வரத்து உள்ளது. மொத்தம் உள்ள 24 அடி ஏரியின் கொள்ளளவில் 21.30 அடிக்கு நீர் உள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT