ADVERTISEMENT

நீர் திறப்பு அதிகரிப்பு; பவானிசாகர் அணையின் நீர்மட்டம் சரிந்தது

08:15 PM Sep 16, 2023 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக இருப்பது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. கடந்த சில நாட்களாக அணைக்கு வரும் நீர் வரத்தைக் காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவில் நீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது. அதேநேரம் மழைப் பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து குறைந்து வருகிறது.

இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 74.84 அடியாக சரிந்துள்ளது. அணைக்கு வினாடி 1,162 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக 2,300 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. காளிங்கராயன் பாசனத்திற்கு 500 கன அடியும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடி என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து 2,900 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 24.83 அடியாகவும், பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 13.61 அடியாகவும், வரட்டு பள்ளம் அணையின் நீர்மட்டம் 21.19 அடியாகவும் உள்ளது. பவானிசாகர் அணையைத் தொடர்ந்து மற்ற அணைகளின் நீர்மட்டமும் தொடர்ந்து சரிந்து வருகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT