ADVERTISEMENT

தேசிய நெடுஞ்சாலையில் இறந்த உடலை கிடத்தி சாலை மறியல்

08:49 PM May 21, 2020 | kalaimohan

ADVERTISEMENT

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அருகேயுள்ள ஐயாவூர் பகுதியை சேர்ந்தவர் ஜெயசீலன். இவரது மகன் 30 வயதான பிரதாப், ஊர்க்காவல் படையில் இணைந்து பணியாற்றி வருகிறார். இவர் மே 20ந்தேதி அகரம்சேரி அருகே சென்னை – பெங்களுரூ தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலத்தின் அருகில் இறந்து கிடந்தார். அவரின் உடலில் காயங்கள் இருந்தன. இவரது குடும்பத்தார் வந்து உடலை வீட்டுக்கு எடுத்து சென்றனர்.

ADVERTISEMENT


மே22ந் தேதி மாலை 4 மணியளவில் அடக்கம் செய்ய இறுதி பயணத்துக்காக வாகனத்தில் சுடுகாட்டுக்கு கொண்டு சென்றனர். அப்போது, இறந்தவரின் குடும்பதார், உறவினர்கள் மற்றம் நண்பர்கள் பிரதாப்பின் இறப்பில் மர்மம் இருப்பதாகவும், அவரை அடித்து கொலை செய்து யாரோ வீசியுள்ளனர், அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனக்கூறி சென்னை – பெங்களுரூ தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பள்ளிக்கொண்டா சுங்கசாவடி அருகே சாலை மறியல் செய்தனர்.

சுமார் நூற்றுக்கு மேற்பட்டோர் நடுரோட்டில் உடலை கிடத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேல் சாலை மறியல் நடைபெற்றது. ஊரடங்கு உத்தரவில் அத்தியாவசிய பணிக்கும், அவசர பணிக்கும் வாகனத்தில் செல்பவர்களின் வாகனத்தில் சிக்கி நின்றன. இதனால் பதட்டம் அதிகமானது. பள்ளிக்கொண்டா போலீஸார் சாலைமறியல் நடைபெற்ற இடத்துக்கு வந்து, புகார் பதிவு செய்துள்ளோம், மர்ம மரணம் என வழக்கு பதிவு செய்துள்ளோம், விசாரணை நடைபெற்று வருகிறது. நிச்சயம் நீதி கிடைக்கும் என நீண்ட நேரம் சமாதானம் செய்து போராட்டத்தை கைவிட செய்து, உடல் அடக்கம் செய்ய வைத்தனர். இது அந்த பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.


Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT