ADVERTISEMENT

அவமானமடைந்த ஆத்திரத்தில் நிகழ்ந்த கொலை-திருச்சியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

08:57 PM Nov 29, 2020 | kalaimohan

ADVERTISEMENT

திருச்சியில் கடந்த 26.10.2020 அன்று ஆட்டோ ஓட்டுநரை வீட்டு வாசலில் வைத்து அவரது குடும்பத்தின் கண்முன்னரே கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

திருச்சி, திருவானைகோவில் அருகே ஆட்டோ ஓட்டி வருபவர் முருகன். அதே பகுதியில் உள்ள பாரதி நகரை சோ்ந்த குணசேகரன் மற்றும் அவரது மனைவி பரமேஸ்வரி ஆகியோர் கறிக்கடை நடத்தி வருகின்றனா். ஆட்டோ ஓட்டுநர் முருகனுக்கு சொந்தமான ஆட்டை திருட வந்ததாக குணசேகரன் மற்றும் மனைவி பரமேஸ்வரி இருவருடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் முருகன் ஸ்ரீரங்கம் காவல நிலையத்தில் அவா்கள் மீது புகார் கொடுத்தார். ஆடு திருட முயன்றதாக முருகன் கூறிய புகாரால் அவமானமும், ஆத்திரமும் அடைந்த பரமேஸ்வரி அவருடை மகள் வழக்கறிஞர் முத்துலட்சுமி, மகன் மணிகண்டன் இருவரும் வெளியூரில் பணியாற்றி வரும் நிலையில், அவா்களை வரவழைத்து முருகனை கொலை செய்ய அறிவுறுத்தியுள்ளார்.

இதனால் மணிகண்டனுடை கூட்டாளிகளான அருண்குமார்(17), ஹரிஹரன்(17, செல்வகுமார்(16), ராஜேஷ்(17), கண்ணன்(17), நரேஷ்(16) உள்ளிட்டவா்களுடன் முருகனுடைய வீட்டிற்கு சென்று முருகனை வீட்டிற்கு வெளியே இழுத்து வந்து, அவருடைய குடும்பத்தின் கண்முன்னரே அவரை சரமாரியாக வெட்டி கொன்றனர். இதில் முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த வழக்கில் தொடர்புடைய மணிகண்டனின் கூட்டாளிகளை காவல்துறையினர் கைது செய்தனர். குணசேகரன், பரமேஸ்வரி அவரது மகள் முத்துலட்சுமி உள்ளிட்டோர் தலைமறைவாக இருந்த நிலையில், அவா்களைப் பிடிக்க திருச்சி மாநகர காவல்துறை ஆணையா் லோகநாதன், ஸ்ரீரங்கம் உதவி ஆணையா் சுந்தரமூா்த்தி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் பணி நடைபெற்றது.

தேடுதலில், அவா்கள் கோவை மாவட்டத்தில் உள்ள தனியார் லாட்ஜில் தங்கி இருப்பதாக கிடைத்த தகலின் அடிப்படையில் 28.11.2020 அன்று அவர்களை கைது செய்தனர். அவா்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாக பரமேஸ்வரியின் மருமகன் விக்னேஷ், குணசேகரனின் தம்பி முத்துக்குமார் உள்ளிட்டவா்களையும் காவல்துறையினர் கைது செய்தனர். இந்த கொலை சம்பவத்திற்கு காரணமாகவும், மூளையாகவும் செயல்பட்ட பரமேஸ்வரியின் மகள் வழக்கறிஞர் முத்துலட்சுமி மீது வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT