திருச்சியில், 5 வயது சிறுவன்திறந்தகழிவுநீர்க் கால்வாயில் விழுந்து, ஒருநாளுக்குப் பின் (இறந்த நிலையில்)மீட்கப்பட்டசம்பவம்பெரும் சோகத்தைஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம், தென்னூரில் உள்ள அன்னை சத்யா நகரில் வசித்துவரும் நளினி-பிரேம்குமார் தம்பதியினரின் 5 வயது மகன்,யஷ்வந்த்.நேற்றுமாலை,வீட்டிற்குவெளியே விளையாடச் சென்றயஷ்வந்த், காணாமல் போனநிலையில், அவரை அவரதுபெற்றோர்களும், உறவினர்களும் விடிய விடியத் தேடியுள்ளனர். இந்நிலையில் அடுத்த நாள் காலை, அருகே உள்ள 5 அடி ஆழம் கொண்டதிறந்தவெளிசாக்கடையில் சிறுவன்யஷ்வந்த் சடலமாக மிதப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள், அவரது பெற்றோருக்குத் தகவல் தெரிவித்ததோடு, காவல் நிலையத்திற்கும் தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்ததில்லைநகர்போலீசார், சிறுவனின் உடலைக்கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.பின்னர், உடல் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்பகுதியில் கழிவுநீர்க் கால்வாயில் குழந்தைகள் தவறி விழுவது இது முதன்முறையல்ல, இதற்குமுன்னே பலமுறைசிறுவர்கள், குழந்தைகள் அந்த திறந்தவெளிகழிவுநீர்க் கால்வாயில் விழுவதுதொடர்கதையாக நடந்து வருகிறது.
ஆனால், எப்படியும் காப்பாற்றிவிடுவோம். இதுவரை உயிரிழப்பு வரை செல்லவில்லை. தற்பொழுது ஒரு உயிரைப் பலிகொண்டுள்ளது, அந்தச் சாக்கடைக் கால்வாய். இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகத்திற்குத் தொடர்ந்து சொல்லியும்நடவடிக்கை எடுக்கவில்லை.சிறுவன் யஷ்வந்த் அந்தப் பகுதியில் உள்ள அனைவருக்கும் பிடித்த, மிகவும் துருதுவெனஇருக்கும்சிறுவன் எனவும், அவன் இறந்ததைஎங்களால்ஏற்றுக்கொள்ள முடியவில்லை, எனக் கண்ணீருடன் அப்பகுதிமக்கள் தெரிவித்தனர். சிறுவனின் உயிரிழப்பு, திருச்சிதென்னூரைப் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.