
காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அக்கா, தங்கை என சகோதரிகள் இருவர் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருச்சியில் மாவட்டம் அயன் புதுப்பட்டியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
திருச்சி மாவட்டம் அயன் புதுப்பட்டியை சேர்ந்தவர் பிச்சை. இவரது மனைவி அகிலாண்டேஸ்வரி. இந்த தம்பதியினருக்கு வித்யா (21), காயத்ரி (20) என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்கள் இரண்டு பேரும் திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் தங்கி அங்குள்ள ஜவுளி நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர். இந்நிலையில் சொந்த ஊரான அயன் புதுப்பட்டியில் நடைபெற்ற திருவிழாவிற்காக வந்திருந்த இருவரும் செல்போனில் அடிக்கடி பேசிக் கொண்டிருந்தனர். இதனால் சந்தேகமடைந்த தாய் அகிலாண்டேஸ்வரி இரண்டு பேரிடமும் விசாரித்துள்ளார்.
அப்பொழுது வித்யா காங்கேயத்தைச் சேர்ந்த நபரை காதலித்து வந்தது தெரியவந்தது. அதேபோல் காயத்ரியும் வேறொரு நபரை காதலித்து வந்ததாக தாயிடம் தெரிவித்துள்ளார். இதற்கு வீட்டிலிருந்து எதிர்ப்புகிளம்பிய நிலையில் நேற்று காலை வீட்டை விட்டு வெளியே சென்ற வித்யா, காயத்ரி ஆகிய இரண்டு பேரும் விவசாயக்கிணறு ஒன்றில் குறித்து தற்கொலை செய்து கொண்டனர்.
இருவரின் செல்போனும் கரைப்பகுதியில் கிடந்ததை கண்ட மாடு மேய்த்தவர்கள் கிணற்றுக்குள் எட்டிப் பார்த்தபொழுது 2 உடல்கள் நீரில் மிதந்தபடி இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக வளநாடு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் துவரங்குறிச்சி தீயணைப்பு துறையினர், வளநாடு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இரண்டு பேரின் உடல்களையும் மீட்டனர்.சகோதரிகள் இருவர் காதல் எதிர்ப்பால் ஒரே கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டது அந்த பகுதியில் சோகத்தையும்பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)