ADVERTISEMENT

கட்டிமுடித்து 6 மாதம் கூட ஆகவில்லை... ஒற்றை மழைக்கே அடித்துச் சென்ற ஆற்றுப்பாலம்!

10:14 PM Nov 19, 2020 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை பொழிந்து வரும் நிலையில், ராமநாதபுரம் அருகே உள்ள திணைகுளத்தில், 2 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டிருந்த வடிகால் பாலம், மழை நீரில் அடித்துச் செல்லப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கட்டப்பட்ட வடிகால் பாலம் ஒரு மழைக்கே தாங்காமல் ஆற்றில் அடித்துச் சென்றதாக அப்பகுதியினர் குற்றம் சாட்டினர்.

அதேபோல், ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டம், உசிலங்குளம் பஞ்சாயத்தைச் சேர்ந்த ஊராங்கோட்டையில் தடுப்பணை கட்டினார்கள். கட்டி ஆறு மாதம் கூட ஆகாத அந்தத் தடுப்பணை, ஒற்றை மழைக்கே அடித்துச் சென்றுவிட்டது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்பொழுது, ஆற்றிலிருந்து மணல் எடுத்து பாலத்தைச் சரியாக சிமெண்ட் கூட பயன்படுத்தாமல், தரமற்ற நிலையில் கட்டியுள்ளதால் பாலம் சேதம் அடைந்ததாகத் தெரிவித்தனர். அதேபோல் பாலம் கட்டுவதற்கு, 10 லட்சம் ரூபாய் செலவாகி உள்ளதாக மதிப்பீட்டுத் தொகை எழுதப்பட்டுள்ள நிலையில், 2 லட்சம் கூட இதற்குச் செலவு செய்திருக்க மாட்டார்கள் என அப்பகுதியினர் குற்றச்சாட்டு வைத்தனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT