ADVERTISEMENT

நெல் கொள்முதலில் ஊக்கத்தொகை; முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணை

08:29 AM Aug 31, 2022 | angeshwar

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழகத்தில் நெல் கொள்முதலில் சாதாரண நெல் குவிண்டாலுக்கு 75 ரூபாயும் சன்னராக நெல் குவிண்டாலுக்கு 100 ரூபாயும் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அரசு வெளியிட்ட சுற்றறிக்கையில் ஒன்றிய அரசு: "2022-2023 காரிப் பருவத்திற்கு குறைந்தபட்ச ஆதார விலையாக சாதாரண ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2040/-என்றும், சன்னராக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2060/- என்றும் நிர்ணயித்துள்ளது.

இந்நிலையில், நெல் உற்பத்தியினைப் பெருக்கும் வகையிலும், விவசாயிகளின் துயர்துடைத்து அவர்களை மேலும் ஊக்கப்படுத்தும் நோக்கோடும். 'தமிழ்நாடு அரசு சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டிலும் சாதாரண நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.75/-ம். சன்னராக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ100/-ம் கூடுதல் ஊக்கத் தொகை வழங்க ஆணை பிறப்பித்து அதன்படியே, தற்போது சாதாரண நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ2115/- என்றும், சன்னராக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2160- என்றும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் விற்கும் விவசாயிகளுக்கு வழங்க தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது மேலும்,இந்த புதிய குறைந்த பட்ச ஆதார விலை மற்றும் மாநில அரசின் ஊக்கத் தொகையினையும் செப் 1 முதல் வழங்கவும் தமிழக முதல்வர் ஆணையிட்டுள்ளார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT