ADVERTISEMENT

அண்ணாமலைப் பல்கலை கழக வேளாண் புல மாணவிகள் கிராமத்தில் தங்கி பயிற்சி பெறும் திட்ட துவக்க விழா

11:04 AM Sep 26, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் புலத்தில் வேளாண் பட்டப்படிப்பு இறுதி ஆண்டு பயின்று வரும் மாணவ, மாணவிகள் வேளாண் தொழிலில் நேரடி அனுபவம் பெரும் பொருட்டு கிராமத்தில் தங்கி பயிற்சி பெறும் திட்டத்தினை பல்கலைக்கழகம் செயல்படுத்தி வருகிறது. இதில் மாணவ, மாணவிகள் தனித்தனி குழுக்களாக பிரிந்து குறிப்பிட்ட கிராமங்களை தேர்ந்தெடுத்து சுமார் 50 நாட்கள் அந்த கிராமத்திலேயே தங்கி வேளாண் பணிகள் எவ்வாறு நடைபெறுகிறது, விவசாயிகள் என்னென்ன பிரச்சனைகளை சமாளித்து வருகிறார்கள், வேளாண் தொழில்நுட்பங்களை எவ்வாறு கடைபிடிக்கிறார்கள் போன்ற அனுபவங்களை நேரடியாக தெரிந்து கொள்ளும் பொருட்டு இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கீரப்பாளையம் வட்டாரம், குச்சிப்பாளையம் கிராமத்தில் 16 மாணவிகள் குழுவாக சேர்ந்து வேளாண் பணி அனுபவம் மேற்கொள்கிறார்கள். இந்த குழுவிற்கு மாணவி நிஸாலினி தலைமை ஏற்றுள்ளார். இப்பயிற்சியின் துவக்க விழா குச்சிப்பாளையம் அருகிலுள்ள புளியங்குடி கிராமத்தில் நடைபெற்றது. அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் புல இணைப் பேராசிரியர் ராஜ் பிரவீன் தலைமை தாங்கினார்.

காட்டுமன்னார்கோயில் வேளாண்மை உதவி இயக்குநர் ஆறுமுகம் பாரம்பரிய நெல் விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் நாட்டுப் பாசுமதி நெல் விதையை விவசாயிகளுக்கு வழங்கி பாரம்பரிய விவசாயத்தின் தேவை முக்கியத்துவம் குறித்து விளக்கி கூறினார். இதனைத் தொடர்ந்து பல்கலைக்கழக வேளாண் புல தோட்டக்கலை துறை இணைப்பேராசிரியர் கமலக்கண்ணன், கீரப்பாளையம் வேளாண்மை உதவி இயக்குநர் சித்ரா ஊராட்சி மன்ற தலைவி நதியா, கிராம நிர்வாக அலுவலர் முத்துலட்சுமி, முன்னோடி விவசாயி நெடுஞ்செழியன் கலந்துகொண்டு பேசினர். விவசாயிகள், பொதுமக்கள், பள்ளி சிறார்கள் கலந்து கொண்டனர். மாணவி நேசிகா நன்றி கூறினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT