கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் வரலாற்று பிரிவு மற்றும் வரலாற்று துறை சார்பில் தென்னிந்திய வரலாற்றுப் பேரவையின் 40-வது ஆண்டு மாநாடு நடைபெற்றது. ஜனவரி 31 முதல் பிப்ரவரி 2 வரை மூன்று நாள் மாநாடக நடைபெறுகிறது. மாநாட்டிற்கு பல்கலைக்கழகத் துணைவேந்தர் முருகேசன் தலைமை வகித்தார். கல்கத்தா பல்கலைக்கழக வரலாற்றுப் பேராசிரியர் பந்தோபாத்யாயா மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். அண்ணாமலை பல்கலைக்கழக பதிவாளர் கிருஷ்ணமோகன் வாழ்த்துரை வழங்கினார்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle ||
[]).push({});
சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் ராஜேந்திரன் சிறப்புரையாற்றி பேசுகையில், இந்த பேரவை 1980ல் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் துவக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டு தேசிய அளவில் ஒரு பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்டு வந்தது. தற்போது முதல் முறையாக இங்கு நடைபெறுகிறது. இந்த பேரவையின் மூலம் வரலாற்றின் முக்கியதுவம் குறித்து விவாதிக்கப்ட்டு அதனை எளிய முறையில் இளம் தலைமுறையினருக்கு கற்பிக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. வரலாறும், அறிவியலும் இணைந்து பல்வேறு ஆராய்சிகளை செய்து வெற்றியாக்கியுள்ளது. இந்த மாநாட்டில் இளம் வரலாற்று ஆராட்சியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். மாணவர்கள் வரலாற்றை உள்வாங்கி படிக்கவேண்டும்.
மாநாட்டில் வரலாற்று அறிஞர்கள் சமூக அறிவியலாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட ஆயிரத்து 1200க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் தென்னிந்திய வரலாறு மற்றும் கலாச்சாரம் சார்ந்த தலைப்புகளில் விவாதம் நடந்தது. தென்னிந்திய பண்பாட்டு மற்றும் வரலாற்று சின்னங்களை எதிர்கால நலன் கருதி பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் இந்த மாநாடு நிறைவு பெறுகிறது மாநாட்டின் நிறைவு நாளில் பெங்களுரில் உள்ள இந்திய வரலாற்று ஆராய்ச்சி மையம் இயக்குனர் அருண் கலந்துகொண்டு உரையாற்றுகிறார். மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ராஜன். அண்ணாமலை பல்கலைகழகம் வரலாற்றுத்துறை பேராசிரியர் சங்கரி ஆகியோர் மாநாட்டுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகின்றனர்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837429466-0'); });
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் முருகேசன் நம் நாட்டின் வரலாறுகளையும், வரலாற்றுச் சின்னங்களையும், புராதான சின்னங்களை பாதுகாக்கும் வகையில் வரலாற்று ஆய்வாளர்கள் நடுநிலையுடன் வரலாறுகளை எழுதவேண்டும் என கேட்டுகொண்டர். அறிவியலும், வரலாறும் இணைந்து பல்வேறு வெற்றிகளை பெற்றதற்கான ஆதாரங்கள் பல உள்ளது. வரலாற்று ஆய்வுகளுக்காக மத்திய மாநில அரசுகள் பல்வேறு நிதிகளை ஒதுக்குகிறது. இதனை மாணவர்கள் பயன்படுத்தி வரலாற்று ஆய்வுகளில் ஈடுபட வேண்டும். தற்போது வரலாற்று பாடத்தை பொருளியல், மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட பட்டமேற்படிப்பு என அனைத்து பாடப்பிரிவுகளிலும் சேர்க்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் வரலாறுகளை எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் எளிமைப்படுத்தி கற்பிக்கும் வகையில் இந்த மாநாடு மூலம் வலியுறுத்தப்படுகிறது. மேலும் கலாச்சாரம் குறித்த வரலாற்று ஆய்வுகளை நவீன கால வரலாறு இளம் வரலாற்றாய்வாளர்கள் எழுதவேண்டும். வரலாற்றை மாணவர்கள் படித்தால் மட்டுமே மனதை பக்குவப்படுத்த முடியும் எனவே வரலாற்றை படித்து நம் வாழ்வியல் முறையை அறிந்து நாட்டின் வளர்ச்சி மாணவர்கள் பங்காற்றவேண்டும் என்று கூறினார். இவருடன் காரைகுடி அழகப்பா பல்கலைக்கழக பேராசிரியர் ராஜேந்திரன் உடன் இருந்தார்.
.