College of Agriculture Day at Annamalai University!

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வேளாண் கழகம் சார்பில் வேளாண் கல்லூரி தின நடைபெற்றது. வேளாண் கழக துணை தலைவர் இமயவரம்பன் வரவேற்புரை வழங்கினார். வேளாண்புல முதல்வர் சுந்தரவரதராஜன் தலைமை தாங்கினார். அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் இராம. கதிரேசன் விழாவைத் துவக்கி வைத்து பேசுகையில் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண்புலத்தின் பங்களிப்பை மாநில மற்றும் தேசிய அளவில் விளக்கிக் கூறினார். இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி சிறப்புரையாற்றி பேசுகையில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகம் மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் முக்கிய துறைகளில் இணைந்து பணிபுரிய வேண்டிய தேவை உள்ளது என்பதை விளக்கிப் பேசினார். இவ்விழாவின் ஒரு பகுதியாக இயற்கை வேளாண்மை மற்றும் வளங்குன்றா வேளாண் மைய அடிக்கல் திறப்பு விழாவும் நடைபெற்றது. அண்ணாமலைப் பல்கலைக்கழக பதிவாளர். சீதாராமன் வாழ்த்துரை வழங்கினார்.

Advertisment

தமிழ்நாடு வேளாண் புதுமை விருது பெற்ற இளநிலை வேளாண் இறுதி ஆண்டு மாணவர்கள் பிரேம்குமார், பிரேமதர்ஷினி ஆகியோர் இவ்விழாவில் கௌரவிக்கப்பட்டனர். பின்னர் கல்லூரி விழாவில், கலை, விளையாட்டு மற்றும் கலாச்சார போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. துணைவேந்தரின் நேர்முக செயலர் பாக்கியராஜ் மற்றும் மக்கள் தொடர்பு அதிகாரி இரத்தின சம்பத் ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியாக வேளாண் கழக பொருளாளர் இலங்கை மன்னன் நன்றி கூறினார்.

Advertisment