ADVERTISEMENT

நான் ரவுடி இல்ல சாமி... எப்படி என்னை ரவுடின்னு சொல்றீங்க? வரிச்சூர் செல்வம் அதிரடி

05:23 PM Jul 20, 2019 | rajavel

ADVERTISEMENT

காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் அத்திவரதர் கடந்த 1-ந் தேதி முதல் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். அத்திவரதரை விஐபி வரிசையில் சென்று முக்கியஸ்தவர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் அத்திவரதரை விஐபி வரிசையில் சென்று பிரபல ரவுடியான வரிச்சூர் செல்வம் தனது நண்பர்களுடன் தரிசனம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ADVERTISEMENT

முக்கிய நபர்கள் அத்திவரதரை தரிசிப்பதற்காக ஒதுக்கப்பட்டிருந்த வரிசையில் சென்று தரிசனம் செய்தார். அத்திவரதருக்கு அருகாமையில் அமரவைக்கப்பட்டார். வரிச்சூர் செல்வம் அத்திவரதரை தரிசனம் செய்யும் வீடியோ காட்சிகள் சமூக வலை தளங்களில் பரவி விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது.


இதுதொடர்பாக வரிச்சூர் செல்வம் பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுத்துள்ளார்.

அதில், நான் ஏன் விஐபியாக இருக்கக்கூடாது. எனக்கு இன்கம் டாக்ஸ் ரெண்டு கோடி ரூபாய் அபராதம் போட்டாங்க. இதுவரைக்கும் எனக்கு ஏன் போட்டார்கள் என்று தெரியவில்லை. நான் ஒரு விஐபி இல்லன்னா என் மேல ரெண்டு கோடி ரூபாய் போட்டிருப்பார்களா?

காஞ்சிபுரத்திற்கு அத்திவரதர் என்னை வரவழைத்தார். கடவுள் என்னை கூப்பிடுகிறார். நான் விஐபி பாஸில் போகிறேன். அங்கு உள்ளவர்கள் என்னை அங்கு உட்கார வைக்கிறார்கள். இது ஒரு தப்பா? அடுத்த 40 வருஷத்துக்கு அப்புறம்தான் பாக்க முடியும். அடுத்த 40 வருஷத்துல கண்டிப்பாக நான் இருக்கப்போறதுல்ல. அதனால பார்க்கப்போனேன்.



நான் ரவுடியே கிடையாது. 1985ல் எங்க அப்பாவை ஒருவர் தாக்கினார். பதிலுக்கு நான் தாக்கினேன். இவர்களாகவே ரவுடி என்று சித்தரித்துவிட்டனர். ரவுடின்னா என்ன. பொதுமக்களை ஏமாற்றுவது, பறிப்பது, கடையில சாப்பிட்டு காசுக்கொடுக்காம போறது, இதெல்லாம்தான் ரவுடி. நான் அந்த மாதிரி கிடையாதே. மூனு, நாலு கோடி ரூபாய்க்கு நான் கார் வைச்சிருக்கேன். நான் ஏன் ரவுயா இருக்கணும்.

பொதுமக்கள் என்னுக்கிட்ட வருவாங்க, என் இடத்தை காலி பண்ணமாட்டேங்குறாங்க என்று சொல்லுவாங்க. நான் போய் பேசுவேன். இதைத்தான் நான் செஞ்சிருக்கேன். இதுவரைக்கும் நான் பொதுமக்களை ஏமாத்துனது கிடையாது. பொதுமக்களுக்கிட்ட நான் சண்டை போட்டது கிடையாது. பொதுமக்களுக்கு நான் என்னைக்கும் துரோகம் பண்ணுனது கிடையாது. அப்புறம் எப்படி என்னை ரவுடின்னு சொல்றீங்க. அந்த காலத்துல ஊர்ல பஞ்சாயத்தாருன்னு சொல்லுவாங்க. அவுங்கள ரவுடின்னு சொல்ல முடியுமா? அதைப்போலத்தான் பஞ்சாயத்தாரு. நான் பொதுமக்களுக்கிட்ட நல்ல பெயர்லத்தான் இருக்கேன்.


என்னுடைய ரோல் மாடல் விஜய் மல்லையாதான். அவர்தான் என்னுடைய குரு. அவர்தான் வாழ்க்கையை வாழ்கிறார். பிறக்கும்போது ஏழையா பொறப்பது நாம் செய்த தப்பு கிடையாது. ஆனால் சாகும்போது ஏழையா சாகக்கூடாது.

எனக்கு எந்த அரசியல் பின்புலமும் கிடையாது. யார் இவரு வரிச்சூர் செல்வம் அப்படியின்னு, நான் வித்தியாசமாக நகைகளை போட்டுள்ளதால் பிரபலமாகிறேன். கலைஞர் அய்யா அப்படின்னா கண்ணாடி. எம்.ஜி.ஆர். என்றால் தொப்பி. வரிச்சூர் செல்வம் அப்படியின்னா இந்த நகை. வரிச்சூர் என்பது எங்க ஊர். வரிச்சூர் என்றால் கூகுளில் காட்டாது. இப்ப வரிச்சூர் எங்க இருக்குன்னு தேடுறாங்கல்ல. எங்க ஊருக்கு நான் பெருமை சேர்க்கிறேன். இவ்வாறு கூறினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT