தனக்கு அதிமுக பொதுச்செயலாளர் பதவி அல்லது முதல் அமைச்சர் பதவி வேண்டும் என்று டெல்லியில் அடிக்கடி அழுத்தம் கொடுத்து வருவதோடு, தனது மகன் ரவீந்திரநாத் குமாருக்கு மத்திய அமைச்சரவையில் இடம் வழங்க வேண்டும் என்றும் டெல்லி பாஜக தலைவர்களிடம் தொடர்ந்து கோரிக்கைகளை வைத்துக்கொண்டிருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம்.

ops

Advertisment

வேலூர் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது ஓ.பன்னீர்செல்வம் அத்திவரதரை தரிசனம் செய்தார். அப்போது பட்டாடை வழங்கி, தனக்கு பொதுச்செயலாளர் பதவி அல்லது முதல் அமைச்சர் பதவி வேண்டும் என்று தரிசனம் செய்தார். அங்கிருக்கும் குருக்களை கவனித்து, மந்திரம் ஓதும்போது முதலமைச்சர் பதவி வழங்க அருள் புரிய வேண்டும் என்று அவர்களை தன் காதில் விழும்படி சொல்ல வைத்தார்.

Advertisment

இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னைக்கு வந்த அமித்ஷா, எடப்பாடி பழனிசாமியிடம் நீங்கள் வெளிநாடு செல்லும்போது உங்களது பொறுப்புகளை துணை முதல்வரான ஓ.பன்னீர்செல்வத்திடம் ஒப்படைத்து செல்லுங்கள் என்று கூறியதும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு மிகப்பெரிய நம்பிக்கை வந்திருக்கிறதாம். தான் முதல் அமைச்சர் ஆன மாதிரியே ஒரு சந்தோஷம் அவருக்கு வந்திருக்கிறதாம்.

அத்திவரதரை தரிசனம் செய்ததாலேயே, தன் முன்பே ஓ.பன்னீர்செல்வத்திடம் பொறுப்பை ஒப்படையுங்கள் என்று அமித்ஷா கூறியுள்ளார் என்று நம்பிக்கையில் உள்ளார் ஒ.பன்னீர் செல்வம். சயன கோலத்தில் இருந்த அத்திவரதரை தரிசனம் செய்தபோதே நமக்கு சாதகமாக அமித்ஷா பேசுகிறார், ஆகையால் நின்ற கோலத்தில் அத்திவரதரை தரிசனம் செய்வோம் என்று மீண்டும் தரிசனம் செய்ததோடு, மீண்டும் பட்டாடை எடுத்து கொடுத்து அங்கிருக்கும் கருக்களை கவனித்திருக்கிறார். அவர்களும் ஓ.பன்னீர்செல்வம் திருப்திப்படும் வரை சிறப்பு தரிசனத்திற்கு ஏற்பாடு செய்தனர்.